எவரையும் குற்றம்
கூறாதிர்
உங்களுடைய த்வ்ருக்ளுக்காக்
மற்றவரை குற்றஞ் சாட்ட்வேண்டாம்.
உங்கள் காலில்
நின்று, அவற்றுக்கு முழுப் பொறுப்பையும் உங்கள்
மீதே சுமத்திக்
கொள்ளுங்கள், “நான் அனுபவிக்கும் இந்த துன்பம் என்
செய்லினாலேயே
ஏற்பட்டது .ஆகவே அது என் முயற்சியால்
நீக்கப்படவேண்டும்” என்று கூறுங்கள்.
எதை நான் உண்டாக்கினே
அதை என்னால் அழிக்க முடியும். மற்றவர்களால்
உண்டாக்கப்படுவதை என்னால்
ஒரு போதும் அழிக்க முடியது.
எனவே நிமிர்ந்து நில்லுங்கள்.தைரியம்
கொள்ளுங்கள்! ஆற்றலுடன்
இருங்கள்! பொறுப்பு
முழுவதையுமே உங்கள் தோளில் ஏற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் விதியை உருவாக்குபவர்கள்
நீங்களே என்பதை அறியுங்கள்.
உங்களுக்குத் தேவையான
பலமும், உதவியும் உங்களிடமே உள்ளன,
எனவே உங்கள் எதிர்காலத்தை
நீங்களே உருவாக்குங்கள்.இறந்த காலம்
இறந்த காலமே, ஆனால்
எல்லையற்ற எதிர்காலம் உங்கள் எதிரிலேயே
நிற்கின்றது. அதை
நன்றக நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
உங்களது ஒவ்வொரு
சொல்லும்,எண்ணமும் செயலும் இவற்றின் பயன்கள்
ஓரிடத்தில்
சேகரிக்கப்படுகின்றன. தீய சொற்கள் தீய என்னங்கள்,
தீய செயல்கள், ஆகியவை
கொடிய புலிகளை போன்று உங்கள் மீது
பாய்வதற்கு தயாராக
உள்ளன்
இனிய சொற்களும்,
நல்லெண்ணங்களும்,நற்செயல்களும் ஒரு லட்சம்
தேவ தூதர்களின்
உதவியுடன் உங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க எப்போதும்
தயாராய் உள்ளன என்று
ஆத்ம உணர்ச்சியுடன் நம்பிக்கை கொண்டு
செயலாரற்றுக.
-விவேகானந்தர்

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.