ஏ மனமே மறவதே|
எகதந்தனை என்றும் மறவாதே-மனமே|
ஏக்கங்கள் போக்கி
என்றேன்றும் துணைநிற்க்கும்,
கபிலனை கந்தனுக்கு
மூத்தோனை
கண்னை இமைகாப்பது
போல்
எம்மை காக்கும்
இறைவனை ஏ மனமே மறவதே|
முத்தமிழ் வித்தகனை
மூல பரம் பொருளை
மூலதாரமாக விளங்கும்
மூஷிகவாகனனை
நம்மை முன்னின்று
காக்கும் முதல்வனை ஏ மனமே மறவதே|
பார்வதி புத்திரனன்
பார்போற்றும் தலைவனை
ஜந்துகரத்தினை
ஆணைமுகத்தோனை
அனுதினம் துதிப்போர்க்கு
அரணாக இருப்போனை ஏ மனமே மறவதே|
எருக்கம்பூ
அருகம்புல் மலை அணிந்தோனே|
மோதகமும் முக்கனியும்
பிரியனே|
அவள் பொறிகடலை அளித்தோர்க்கு
ஆதி அந்தமாக
விளங்கும் அருஙக்கடலே|
என் அய்யனை மறவதே|
ஏ மனமே இமைபொழுததும்
மறவதே|
-
ஆக்கம் திருமதி உ. கிருஷ்ணவேணி உதய குமார்

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.