முருகா முருகா
முருகா முருகா என்று சொல்லுவோம் !
சிவசக்தி வடிவேல்லனை சரணம் பாடுவோம் !
கந்தா கந்தா என்று சொல்லுவோம் –அந்த
கார்த்திகை பாலனை சரணம் பாடுவோம் !
(-பல்லவி)
மூவிர கார்த்திகை
பெண்களின் கைகளிலே
கதிரோலியன தவழ்திட்ட
சிவபாலா!
தந்தைக்கு உபதேசம்
செய்திட்டவா
தகப்பன் சாமி எங்கள்
சுவாமிநாதா!
(-முருகா)
முக்திக்கு வித்தான
முருகனவன்
எத்திக்கு புகழ்
சேர்க்கும் –கந்தகுகன்
முக்கண்ணன்
முக்கண்ணில் உதிர்த்த செல்வன் –அவன்
மும்மலம் அகற்றுகின்ற
செல்வ முத்துகுமரன்!
(-முருகா)
சொல்லுக்குள் பொருளாக
இருக்கின்றவா!
ஓர் உயிருக்கு
உணர்வாக திகழ்கின்றவா!
என் எண்ணத்தில்
எழுத்தாக பிறக்கின்றவா!
எங்கு
நிறைந்திருக்கும் எழில் குமரா!
(-முருகா)
ஆணைமுகன் சோதரா
ஆறுமுகா-தொழும்
அன்பர்கள் நேசனே
உமைபாலா!
அறுபடை வீட்டினில்
ஆட்சிசெய்யும்
அருள் பெரும் ஜோதியே
வேற்றிவேலா!
(-முருகா)
சூரனை மாய்த்திட்ட
சிவசுப்பிரமண்யா!
குன்றுதோறும்
அமர்ந்திட்ட குணசிலா
போகருக்கருளிய
சிவநேசா –நினது
பொற்பதம் பணிந்தோம்-
பூமிநாதா!
(-முருகா)
தேவர் குறை தீர்த்த
கூர்வேலா!
தேவானை வள்ளிகுறத்தி
மகிழ் -மணவாளா!
தீந்தமிழில் சுவையாக
திகழ்கின்ற –திருமால்மருகா!
தண்டாயுதபாணி
தெய்வமே-பழனியப்பா!
(-முருகா)
ஒம் சரவணபவ எனுமோர் மந்திரம்
சன்முக நாதனின்
மூலமந்திரம்
அனுதினம் உனை தொழும்
அடியவர்க்கு
அருள்தனை வழங்கிடும்
திருமந்திரம்
. (-முருகா)
-ஆக்கம் திருமதி உ. கிருஷ்ணவேணி உதய குமார்
.jpg)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.