4. நாம் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய குறிப்புகள்
61.தினமும் கடவுளை இரண்டு நிமிடங்களாவ்து நினைத்து
பிரார்த்திக்க வேண்டும்
62.விடிந்த அன்றைய நாள் நல்ல் நாளாக இருக்க வேண்டும் என் இறைவனிடம் வேண்டிக்கொள்.
63.தினமும் அல்லது வாரத்தில் ஒரு நாளாவது அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்.
64.அன்றாடம் குறைந்தபட்சம் ஒரு ஏழைக்கோ, ஒரு பிராணிக்கோ
உணவு கொடு.
65.அருகில் உள்ள அனாதை இல்லம் ஆசிரமம் ஆஸ்பத்திரி,பள்ளி
ஆலயம் போன்ற இடங்களுக்கு சென்று முடிந்தவரை தர்மம் செய்.
66.சொந்த வீட்டில் தெற்கு,மேற்கு பக்கம் தலை வைத்து படுக்கவும்.
எக்காரணத்தைக் கொண்டும் வடக்கு பக்கம் தலை வைத்து படுக்காதே மாமனார் வீட்டில் தெற்கு பக்கம் தலை வைத்து படுக்கக் கூடாது.
67.நோய்வாய்ப்பட்டவர்கள் (வீடு,ஆஸ்பத்திரி,போது இடம்) தெற்கு பக்கம் தலை வைத்து படுத்தால் விரைவில் குணம் அடைவர்.
68.முன்னோர்க்க்ளுக்குத் திதி தராத்வர்களும், திதி தரும் அன்று தலை குளிக்காத மருமகளும் எதற்கும் பயன்படமாட்டார்கள்
69..கையில் வளையல் இல்லாமல் தண்ணீர் கொடுத்தால் பாவம்.
70.சுபகாரியம் செய்யும்போது அல்லது போக வேண்டும்
என் இருந்தால் கருப்பு துணி அணியாதே.
71.கர்ப்பிணியாக யாரேனும் வீட்டிலிருந்தால் கிணறு தோண்டக் கூடாது (பூமி சம்பந்தமான நீர்).
72.திருமணம் ஆகி கர்ப்பமான பெண் இருக்கும் வீட்டில் ஆடு கோழி
வெட்டவோ, பலியிடவோ கூடாது.
73.பெண்கள் குளித்த பிறகு தலை முடியை விரித்து போட்டுக் கொண்டு வெளியே போகாதே அப்படி போக வேண்டும்மென்றால் நுனி முடியைக் கட்டி விடவும்.
74.பெண்கள் குளித்து ஈர தலையுடன் (தண்ணீர் சொட்ட) ஆலயத்திற்குச் செல்லக் கூடாது (வேண்டுதல் உள்ளவர்கள் மட்டும் அப்படியே செல்லலாம்).
75.கர்ப்பிணியாக உள்ள பெண்கள் மாலையில் எண்னைய் தேய்த்துக்
குளிக்கக்கூடாது.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.