முருகன் துதி
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாக்
குவாய் வருவாய் அருள்வாய் குகனே.
நாள் என் செயும்
வினைதான் என் செயும்
எனை நாடி வந்த கோள்
என் செயும்
கொடுங் கூற்று என் செயும்
குமரேச்ர் இருதாளும்
சிலம்பும்
ச்த்ங்கையும் தண்டையும் சண்முகம்
தோளும் கடம்பும்
எனக்கு
முன்னே வந்து தோன்றீடினே!
-ஆருனகிரிநாத்ர்
முருகனே! செந்தில்
முதல்வனே! மாயோன்
மருகனே! ஈசன் மகனே! ஒரு கை முகன்
தம்பியே! நின்னுடைய
த்ண்டைக்கால் எப்போதும்
நம்பியே கை தொழுவேன் நான்.
உன்னை யொழிய
ஒருவரையும் ந்ம்புகிலேன்
பின்னை ஒருவரையான பின் செல்லேன் –பன்னிருக்கைக்
கோல்ப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேல்ப்பா செந்தில் வாழ்வே
-
நக்கீரர்
ஒருமையுடன் நினது
திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம உறவு வேண்டும்
உல் ஒன்று வைத்து
புறம் ஒன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெரூமை பெறு
நினதுபுகழ் பேச வேண்டும்
பொய்மை பேசாது இருக்க வேண்டும்
பெரு நெறி பிடித்து
ஒழகவேண்டும்
மதமான பேய்பிடியாது இருக்க வேண்டும்
மருவு பெண் ஆசையை
மறக்கக் வேண்டும்
உனை மறவாது இருக்க வேண்டும்
ம்திவேண்டும்
நின்க்ருனை நிதிவேண்டும்
நோயற்ற வாழ்வில் நான் வாழவேண்டும்
தரும மிகு சென்னையில்
கந்தகோட்டத்துன்
வளர் தலம் ஒங்கு கந்தவேளே
தன்முகத் துய்யமனி
உண்முகச் சைவ மணி
சண்முகத் தெய்வ மணியே!

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.