Contributors

Thursday, 28 June 2012

சிவபெருமான் துதி


சிவபெருமான் துதி

தோடுடைய செவியன் விடையேறியோர்
           தூவன் மதி சூடி
காடுடைய சுடலைப் பொடி பூசி என்
           உள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய மலரான் உனை நான்
பணிந்தேத்த அருள் செய்த
பீடுடைய பிரம்மாபுரம் மேவிய
பெம்மான் இவனன்றே
                           -திரு ஞானசம்மந்தர் 
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திரு ஆலவாயன் திரு நிறே.
                           -திரு ஞானசம்மந்தர் 

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னேறிக்குய்ப்பது
வேத நான்கினும் மெய் பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயனே    
                -திரு ஞானசம்மந்தர்
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ய அருள்துறையுள்
அத்தா உனக்கு இனி அல்லேன் எனலாமே
                                -சுந்தரர் தேவாரம்.
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கின வேணிலும்
மூசு வண்டரைப் பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தன் இணையடி நிழலே!

பொன்ணார் மேணியனே! புலித்தோலை அரக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்ரைய்ணிந்தவனே
மன்னே! மாமணியே! மழைபாடியுள் மாணிக்கமே!
அண்ணே உன்னை யெல்லாம் இனி ஆரை நினைக்கேனே!

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
        அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்மையை பெருக்கி பொழுதினை சுருக்கும்
          புழுத்தலைப் புலையனேன் தனக்கு
செம்மையே யாய சிவபத மளித்த
         செல்வமே! சிவபுரானே!
இம்மையே உன்னைச் சிக்கனப் பிடித்தேன்
        எங்கெழுந்தருளுவது இனியே    
-மாணிக்கவசர்

உலகெலாம் உணர்ந்து ஒதற்கறியவன்
நிலவுலாகிய் நீரமலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான் 
மலர்ச் சிலம்படி வாழ்த்தி விளங்குவோம்
–சேக்கிழார்

கல்லாப் பிழையும் கருதாப்பிண்ழையும் கசிந்துஉருகி
நில்லாப் பிழையும், நினையாப் பிழையும் நின் அஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழ்யும்
எல்லாப் பிழையும் பொறுத்த்ருள்வாய் கச்சி ஏகம்பனே
– சேக்கிழார்

நம்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென் கடம்பைத் திருக்கரக் கோயில்ன்
தன்கடன் அடியேனையும் தாங்குதல்
என் கடன் பணிசெய்து கிடப்பதே
– அப்பர்

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பு அருளும் களிப்பே!
காணார்க்கும் கண்டவர்க்கும் காண் அளிக்கும் கண்ணே!
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம் அளிக்கும் வரமே!
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியே!
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுவில் நின்ற நடுவே!
நராகளுக்கும் சுரர்களுக்கும் நலம் கொகுக்கும்  நலமே!
எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்ற சிவமே!
என்னரசே யான் புகலும் இசையும் அணிந்த அருளே!
                                           - சேக்கிழார்
வழங்குகின்றாய் உன்அருளால் அமுதத்தை
வாரிக்கொண்டு விழுங்குகின் றேன்.
விக்கினேன் வினையெனேன் என்
விதி இன்மையால் தயங்கருந் தேனேன்ன
தண்ணீர் பருகத்தந்து உய்யக் கொள்ளாய்
அழுங்கு கின்றேன் உன் அடியானேன்
                                -அடைக்கலமே.
அப்பன் நீ அம்மை நீ ஜயனும் நீ,
       அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒன் பொருளும் நீ
        ஒரு குலமும் சுற்றமும் ஒருகுலம் நீ,
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ,
        துணையாய் என் நெஞ்சம் துறய்பாய் நீ
இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்து நீ
   இறைவன் நீ எறுர்ந்த செல்வன் நீயே.
                                  -அப்பர்
உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்
கற்றாரை யான் வேண்டேன். கற்பனவும் இனிமையும்
குற்றாலத்து  அமர்ந்து உறையும் கூத்தா உன் குறை கழற்கே,
கற்றாவின் மனம் போலக் கசிந்து உருக வேண்டுவனே .

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி,உயிராகி உண்மையுமாய்,இன்மையுமாய்க்,
கோன் ஆகி யான் எனது என்று, அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே

பெற்ற தாய்தன்னை மகன் மறந்தாலும்
பிள்ளையைப் பெற்றதாய்மறந் தாலும்
உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
           உயிரை மேவிட உடல்மறந் தாலும்
கற்ற நெயஞ்சகங் கலைமறந் தாலும்
கண்கள் நன்றிமைப் பதுமறந் தாலும்
நற்ற வ்த்தவர் உள்ளிருந்த தோங்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே.

அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்
அருள் நோக்கில் தீர்த்த நீராட்டிக் கொண்டாய்
எத்தனையும் அரியைநீ எளீயை ஆனாய்
எனையாண்டு கொண்டிராங்கி ஏன்று கொண்டாய்

பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
பிழைத்தனகள் எத்தனையும் பொறுத்தா யன்றே
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ
எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறே.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.