வாசமலர்
வாசம் வீசும்
வசந்தகால் வண்ண மலரே –நீ
புத்துக்குலுங்கி
பூங்காவிலே புன்சிரிப்பாய் அமர்ந்திருக்க
உன்தன் சிரிப்பில்
மயங்கிய சின்னஞ்சிறுசுகள்
செல்லும் வழிமறந்து
சிந்தையிழந்து நிற்கின்றனர்,
உந்தன் வாசந்தனை
தென்றலோடிழையவிட்டு,
இரண்டரக் கலந்து
யாவருக்கும் ஈந்து ஈகையில் இமயமாகிறாய்
வானமெனும் சோலையிலே
வின் மீன்கள் புத்திருக்க
வெண்னிலாவை
வெண்முகில் வெண்திறையிட்டு மறைக்கின்றன –நீயோ
இளசுகள் இளமை என்னும்
இன்ப வெள்ளத்தில் இன்புருவதற்க்கு
உந்தன் இலைகளால்
திறையிட்டு மறைக்கின்றய் – நீ
மலரும் போது தேனினை
இதழேனும் கின்னத்தில் எந்திநிற்க உன்
இதழோடு முத்மிட்டு
இன்பதேனை பருக பொன்வண்டுகள் போட்டியிடுகினற்ன
மலரே நீ இக்காலத்துக்
கவிஞ்ஞர்களின் கருத்தில் கலந்து.
கவிதைகளையும் காவியங்களையும்
கற்பகவிருச்சம் போல்படைக்க
செய்கின்றாய்
நேருவின் நெஞ்சத்தை
நெகிழ வைத்த மலரே நின்றன்
மலர்ச்சியிலே இயற்கை
அன்னையின் சிரிப்பை காணலாம்.
-
-ஆக்கம் திருமதி உ.
கிருஷ்ணவேணி உதய குமார்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.