நாணம்
விரைந்து செல்வது ஏனோ
உன்விழி நீரை அள்ளி
தெளித்து
நிலமகளின் தாகம்
தீர்க்கத்தானோ
நின் ஸ்பரிசத்தால்
நிலமகள் வெட்கி
நாணத்தால் பச்சை
பட்டாடையை போர்த்தினால்
தன் தேகத்தில் காலை
கதிரவனின் கரம் பற்றி கிளிபுற்று அவள்
சுவை மிகுகனிகளும்
அவைதரும் மரங்களும்
வாசம் தரும்
மலர்களும் ஈன்றால் இயற்கை
அன்னை இவ்வியற்க்கை
எழில்அழகு நிலமகளின்
இளமையின் அழகுக்கு
மேலும் மேருகூட்டுகிறது.
-
ஆக்கம் திருமதி உ. கிருஷ்ணவேணி உதய குமார்

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.