Contributors

Monday, 3 June 2013

விடுகதையின் விடை



விடை   :       செங்கள்

விளக்கம்:
                            ஐந்து பேர் கொண்ட குழுவினர் மண் கலவை  செய்து
செங்கள் செய்கின்றனர் பிறகு அதனை வெயிலில்  உலரவைத்து 
அதனை சூளையிலிட்டு சுடுகிறார்கள்

Tuesday, 23 April 2013

புதிர்




பத்து கை பந்தடதாட  ஜந்து கை அமர்ந்துருக்க
சூரியநோடு சூதாட எமநோடு வாதாட?

விடை ?

Tuesday, 9 April 2013

பழமொழிகள்


காலடி சறுக்காமல் வாக்குறுதி சுருக்கக் கூடாது
அதிர்ஷ்டம் என்பது நல் நேரம் அல்ல! உழைக்கும் காலமே
காலம் தாழ்ந்து செய்யும் உதவி உதவிய்ன்று
காலதாமதம் காரிய நஷ்டம்
காய்ந்த மரமே கல்லடி படும்
காக்கைக்கும் தன்குஞ்சு பொன் குஞ்சு
ஞனம் பல பூட்டுகளை திறக்கும் ஒரே சாவிக்கு ஒப்பானது
ஒன்றிருந்தால் இன்னொன்று இல்லை
ஒற்றுமையே வலிமை
மணித் கதைக்கு கையும் இல்லை காலுமில்லை
கண்ணை இமை காப்பது போல காப்பது இறைவன்
கண்ணால் காண்பதே நம்பகமானது
கண்டதே காட்சி கொண்டதே கோலம்
கடுமையான் நோய்க்கு கடவுளே வைத்தியர்
கட்டின் உழைப்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை
கடன் பட்டவன் தூண்டிலில் மீன் போல
கடந்த காலம் திரும்பவும் வராது
கசப்பு மாத்திரைகளே பிணிதீர்க்க வல்லவை
ஓயாக் கவலை தீரா வியாதி
ஓடுகிற ஆடு ஓடி கொண்டே இருக்கும்
ஓட்டம் உள்ள வரை ஆட்டம் அதிகம்
ஒன்றே செய்கினும் நன்றே செய்க
ஒன்றும் தெரியாதவனுக்கு சந்தேகமே வராது
ஒரு வெள்ளிச் சாவி, இரும்பு பூட்டைத் திறந்து விடும்
ஒரு வினாடியில் நாம் செய்யும் தவறு வாழ்நாள் ழுழுவதும் வேதனை தரும்
ஒரு மரம் தோப்பாகாது
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்
ஒரு நாள் கூத்துக்காக மீசையை எடுக்க கூடாது
ஒரு நல்ல மனைவி கணணையும் நல்லவனாக்கிவிடுவாள்
ஒரு நல்ல நாக்கு சிறந்த ஆயுதம்
ஒரு கை தட்டினால் ஓசை வராது
ஒரு இன்பத்திற்கு மனிதன் ஆயிரம் துன்பங்களை அனுபவிக்கிறான்
ஒத்த மனமுடையவற்கள்  சேர்ந்தால், கடலையும் வற்ற வைக்கலாம்
உள்ளத்தை விற்று நல்லதைக் கொள்ளு
ஜயர் வரும் வரை அமாவாசை காத்திரிக்காது
ஜம்பதிலும் ஆசை வரும்
உள்வில்லாம்ல் களவில்லை
ஜந்தில் வளையாதது ஜம்பதில் வளையாது
இரக்கம் உண்டானால் ஏற்றம் உண்டு
உருதியில்லாவிட்டால்,நல்லவனாய் இருக்க முடியாது
ஏழை அழுத் கண்ணீரும் கூரிய வாளும் ஒன்று
ஏணியை தள்ளிவிட்டு பரனை மேல் ஏற கூடாது
உறுதியான் காரியம் ஒரு போதும் கெடாது
எறும்பு ஊறக் கல்லும் தேயும்
எழுவதை விட விழ்வது சுலபம்
எலி வளையானாலும் தனி வலை வேண்டும்
எல்லையற்ற உற்சாகம் தீமை பயக்கும்
எல்லாவற்றிகும் நேரம் உண்டு
உன்னை எச்ஸ்ரிப்ப்வ்ன் தான் உண்மையான் நண்பன்
எல்லா உண்மைகளையும் வெளிப்படையாகச் சொல் முடியாது
எரிவதை உருவினால் கொதிக்கிறது அடங்கும்
உன்னைப் போலவே பிறரை நேசி
எரிகிர் விளக்கானாலும் தூண்டுகோல் வேண்டும்
எம்மதமும் சம்மதம்
உனது நடத்தைகளே,உன்னை வெளிப்படுத்தும் கண்ணாடியாகும்
ஊரோடு பகைத்தால் வேருடன் கெடும்
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குத்தான் கொண்டாட்டம்
உனக்கு அன்பு வேண்டுமானால் நீ அன்பு காட்டு
எதுவும் இருக்கிற் இடத்தில் இருந்தால் தான் மதிப்பு
என்னும் எழுத்தும் கண்னென்த் தரும்
எண் சாண் உடம்புக்கு சிரசே ஆதாம்
எந்தக் கலையைக் கிற்க விரும்பினாலும் அதற்கோர் ஆசான் தேவை
உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது
உழவன் மேட்டை உழுதால் அரசன் நாட்டை ஆள்வான்
உழ்வோர் உலகுக்கு அச்சாணி
உலகத்திலே மிகவும் கசப்பான் பொருள் உண்மை
என்றும் தைரியத்தை விடாதே
உபகாரம் செய்யவிட்டாலும் அபகாரம் செய்யாதே
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
உத்தியோகம் புருஷ் லட்சணம்
ஆழமறியாது காலை விடாதே
 உத்தமமான மனைவி கணவனுக்கு ஒரு கிரீடம்

Monday, 18 March 2013

திருச்செந்ததூர் -2 வது படைவீடு




இயலிசையி லுசித வஞ்சிக்             கயர்வாகி

இரவுபகல் மனது சிந்தித்                    துழலாதே

உயர் கருணை புரியு மின்பக்        கடல்மூழ்கி

உனையெனதுளறியு மன்பைத்           தருவாயே

மயில் தகர்க் லிடேய ரந்தத்       தணைவோனே

கயிலைமலை அனைய செந்திற    பதிவாழ்வே

கரிமுகவ னிளைய கந்தப்                பெருமாளே.

Tuesday, 5 February 2013

அருணகிரிநாத சுவாமிகள் திருவாய்மலர்ந்தருளிய


அருணகிரிநாத சுவாமிகள் திருவாய்மலர்ந்தருளிய
           திருப்புகழ்
              வெண்பா
திருப்புகழைக் கற்கத் திருப்புகழைக் கேட்கத்
திருப்புகழை நித்தஞ் செபிக்கத்-திருப்புகழை
அற்ச்சிக்க முத்தியெளி தாகுமே கூற்றைவென்று
கெர்ச்சிக்க லாமே கெடி.
     விநாயகர் துதி
உம்பர் திருத் தேனுமணிக்        கசிவாகி
ஒண்கடலிற் றேனமுதத்                     துணர்வூறி
இன்பரசத் தேபருகப்             பலகாலும்
என்றனுயிர்க் காதரவு           றருள்வாயே
தம்பிதனக் காகவனத்           தணைவோனே
தந்தைவலத் தாலருள்கைக் கனியோனே
அன்பர் தமக் கானநிலைப்        பொருளோனே
ஜந்துகரத் தானைமுகப்               பெருமாளே. 

கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொறி
 கப்பிய கரிமுகன்             அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியி லுரைபவர்
கற்பகம் என்வினை                கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திறள்புய              மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு            பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட யெழுதிய                     முதல்வோனே
முப்பூர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது போடிசெய்த               அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை                இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள்               பெருமாளே. 


திருப்பரங்குன்றம்---1 வது படைவீடு   
உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை
   உரைத்தி லன்பல மலர்கொடு னடியினை
   உறப்ப ணிந்தில ருதவ மிலனுன                  தருள்மாறு  
உளத்து ளன்பின ருறைவிட மறிகிலன்
விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன்
உவப்பொ டுன்புகழ்  துதிசெய விழைகிலன்            மலைபோலே
கனைத்தெ ழும்பக டது பிடர் மிசைவரு
     கறுத்த வெஞ்சின மறலித னுழையினர்
     கதித்தடர்ந்தெறி கயிறடு கதைகொடு         பொருபோதே
கலக்கு றுஞ்செய லொழிவற அழிவுறு
     கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்
     கணத்தி லென்பய மறமயில் முதுகினில்           வருவாயே
வினைத்த லந்தனி லலகைகள் குதிகொள
     விழுக்கு டைந்துமெ யுகுதசை கழுகுண
விரித்த குஞ்சிய ரெனுமவு ணரையமர்        புரிவேலா
மிகுத்த பண்பயில் குயில்மொழி யழகிய
     கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை
விரைத்த சந்தன ம்ருகமத புயவரை               யுடையோனே
தினத்தி னஞ்சதுர் மறைமுனி முறைகொடு
புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு
சினத்தை நிந்தனை செயுமுனி வரர்தொழ          மகிழ்வோனே
தெனத்தெ னந்தென எனவரி அளிநறை
     தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழினிறை
திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண                      பொருமானே
     
       சந்ததம் பந்தத்                            தொடராலே
         சஞ்சலந் துஞ்சித்                         திரியாதே
       கந்தனென் ன்றுற்                         றுனைநாளும்
    கண்டுகொண் டன்புற்                     றிடுவேனே
  தந்தியின் கொம்பைப்                           புணர்வோனே
    சங்கரன் பங்கிற்                         சிவைபாலா
  செந்திலங் கண்டிக்                        கதிர்வேலா
    தென்பரங் குன்றிற்                      பெருமாளே.



Friday, 25 January 2013

"நாளை நமதே"

"நாளை  நமதே"
பொன்விழா கண்ட பெருமிதத்துடன்
நம் நாட்டின் மணிக்கொடி
நல்லோர் வாழ்த்துரையில்
நிமிர்ந்து பறப்பதைபாரீர்!
தரணியில் இவ்வன்னை பூமிக்கு
தொண்டாற்றிய தன்னலமற்ற
தியாகிகளையும் போற்றுதற்குறிய
பெருந்தலைவர்களையும் இந்நாளில்
நாம் நினைவுகூர்ந்து அவர் தம்
பெற்று தந்த சுதந்திரத்தை பேணிகாத்து
புதியதோர் பாரதம் படைக்க புறப்பட்டு வாரீர்!
வருங்கால மன்னர்களே, சிங்கங்களே,
நம் நாடு பலதுறையில் வளம் பல சிறக்க
துணிவும் துடிப்பும் நுண்ணறிவும் உள்ள
இளைய தலைமுறையினரே! இன்முகத்துடன்
எழ்ச்சி மிகு பாரதம் படைத்திடவாரீர்!
நாம் அனைவரும் ஒன்று கூடி
வலிமை மிகு இந்தியாவை உருவாக்கிடுவோம்
நல்லறம் செழிக்கக் பல் துறைகளில் நாம்
சிறந்து விளங்கிட மாற்றங்கள் பல கண்டு
ஏற்ற மிகு இந்தியாவின் புகழ் வானளாவி நிற்க
இந்நன்நாளில்  நமது பாரதம் வலிமை மிகு
வல்லரசாகிட விரைந்து செயலாற்றி
வெற்றி காணுவோம் வாரீர் !
வாழ்க் பாரதம்வாழ்க் வையகம் !
வாழ்க மணித்திரு நாடு!
வந்தே மாதரம்!  வந்தே மாதரம்!   
ஆக்கம்: கிருஷ்ணவேணி உதயகுமார்

வெற்றி திருவிழா


வெற்றி திருவிழா                                

திருவிழா இன்பத் திருவிழா –வீறு  

கொண்ட சிங்கங்கள் வெகுண்டு எழுந்து

தாய் நாட்டின் மானம் காக்க –அல்லும்

பகலும் அயராது உழைத்து –பாரத

தாயின் அடிமைச் சங்கிலியை அகற்றி

வெள்ளையனே வெளியேறு என விரட்டி

வெற்றிகொடி நாட்டிய வெற்றி திருவிழா

வீர மக்களை ஈன்ற வீரத்தாயாம்

அன்னை பூமிக்கு வெற்றிகளிப்புடன்

வாழ்த்துகூறும் பெருமை மிக்க பெருவிழா

வாழ்க பாரதம் வாழ்க மணித்திருநாடு

வந்தே மாதரம் வந்தே மாதரம் –என்

வாழ்த்திமகிழும் வெற்றிவிழா எங்கள் வெற்றிவிழா

ஆக்கம் கிருஷ்ணவேணி உதயகுமார்

Monday, 14 January 2013

சொல் அமுது

செந்தமிழ் சொல்லாலே சிவஞானப்ழமான
செந்தில்நாதனின் சிறப்பினை செப்பிட
மூலகணபதி முன்நின்றருள்வாய்,
வந்தெனை ஆட்கொண்ட கந்தனே
வண்ண மயில்மீதமர்ந்த சிவ பாலனே போற்றி போற்றி!
வேலை வந்திப்பவர்க்கெந்த  நாளுமே
வாராது துயர் வெற்றி தின்னமே வேலவா போற்றி போற்றி !
ஞானவேல் கையில்கொண்ட ஞானவேலனே
ஞாலத்தை  காக்கும்  சிவகாமி பாலனே போற்றி போற்றி!
ஞானியர் போற்றிடும் ஞானசீலனே
ஞானகுருவாய் வந்து நின்ற் சுவாமி நாதனே போற்றி போற்றி!
தீந்த்மிழ்க்கு சுவை சேர்த்த் முத்தமிழ் வேந்தனே
திருபரங்குன்றம் அரும் சுப்ரமண்யனே போற்றி போற்றி!
தித்திக்கும் திருப்புகழ்தந்த தேவனே
திணை புனை வள்ளி மணாளனே போற்றி பொறி!
சித்தர்கள் போற்றிடும் பழனிநாதனே
சிக்கல் சிங்கார வடி வேலனே போற்றி போற்றி!
சிந்தையில் வைத்தேன் உந்தனை குகனே
சீர் மிகு வாழ்வெனக்கு  தந்தனை குமரனே போற்றி போற்றி!
மூவிரு முகங்கள் கொண்ட முருனே
முன்நின்று காத்திடும் முதல்வனே போற்றி போற்றி!
முவுலகமும் போற்றும் முக்கண்ணன் மைந்தனே
முக்தியை நல்கிடும் முத்துகுமரனே போற்றி போற்றி!
பழனியில் அமர் பாலமுருகனே
மைந்தமிழ் பாவலரின் பாட்டுடைத் தலைவனே போற்றி போற்றி!
படைவீடு கொண்ட பன்னிருகையனே
பழமுதிர் சோலை அருள் சரவணபவனே போற்றி போற்றி!
அன்பர்களை ஆட்கொள்ளும் ஜங்கரன் சோதரனே
ஆண்டிகோலம் பூண்ட கிரிகுகனே போற்றி போற்றி!
அவ்வைக்கருளிய சோலைமலையனே
அறுபடை வீடமர்ந்து அருள் தனைவழங்கிடும் அருள்வள்ளளே போற்றி போற்றி !
ஆக்கம்:கிருஷ்ணவேணி உதயகுமார்

ஆட்கொல்லி அருவம்



உருவமிலாதது உள்ளத்தில் உட்புகுந்ததிட்டால்-மனித
உயிரையும் பறிக்கும் வல்லமை கொண்டது,
அகண்ட காணக்த்தேயுள்ள அரும்பெருஞ் செல்வங்கள்
அக்னி குஞ்சகமர்ந்தாள் அழிவது தின்னமே!
சந்தேகத்தீ சாதி மதபேதம் பார்பதில்லை
சாத்திரம் கற்ற பண்டிதராயினும் பாமரராயினும்
பொன் மனமென்னும் கோயிலில் பெற்ற பெரும் செல்வங்கள்
பெரும் சந்தேக்த்தீயில் சிக்கி சீரழிவது தின்னமே!
ஆத்தீக்காட்பட்டோர் உற்றார் உடனபிறந்தாரையும்
ஆரூயிர் தோழனையும் தம் மனைவி மக்களையும் விடுவதில்லை
அச்சந்தேக ப்பெருந்தீயீல்  தான் அழிவது மட்டுமின்றி
அவனில் சகலத்தையும் இழப்பது தின்னமே!
மாசற்ற மனம் பெற மாசில்லா மகேசன் புகழை
முக்காலமும் ஒதுவோர்க்கு  எக்காலமும் துயரில்லை
தேனினும் இனிய திருவாசகம் தன்னை நாவினால்
தினம் இசைப்போர்க்கு எழ்பிறப்பிலும் எத்தீயும் அனுகாது தின்னமே!
                                                                             
ஆக்கம்:கிருஷ்ணவேணி உதயகுமார்