செந்தமிழ் சொல்லாலே சிவஞானப்ழமான
செந்தில்நாதனின் சிறப்பினை செப்பிட
மூலகணபதி முன்நின்றருள்வாய்,
வந்தெனை ஆட்கொண்ட கந்தனே
வண்ண மயில்மீதமர்ந்த சிவ பாலனே போற்றி
போற்றி!
வேலை வந்திப்பவர்க்கெந்த நாளுமே
வாராது துயர் வெற்றி தின்னமே வேலவா போற்றி
போற்றி !
ஞானவேல் கையில்கொண்ட ஞானவேலனே
ஞாலத்தை
காக்கும் சிவகாமி பாலனே போற்றி
போற்றி!
ஞானியர் போற்றிடும் ஞானசீலனே
ஞானகுருவாய் வந்து நின்ற் சுவாமி நாதனே
போற்றி போற்றி!
தீந்த்மிழ்க்கு சுவை சேர்த்த் முத்தமிழ்
வேந்தனே
திருபரங்குன்றம் அரும் சுப்ரமண்யனே போற்றி
போற்றி!
தித்திக்கும் திருப்புகழ்தந்த தேவனே
திணை புனை வள்ளி மணாளனே போற்றி பொறி!
சித்தர்கள் போற்றிடும் பழனிநாதனே
சிக்கல் சிங்கார வடி வேலனே போற்றி போற்றி!
சிந்தையில் வைத்தேன் உந்தனை குகனே
சீர் மிகு வாழ்வெனக்கு தந்தனை குமரனே போற்றி போற்றி!
மூவிரு முகங்கள் கொண்ட முருனே
முன்நின்று காத்திடும் முதல்வனே போற்றி
போற்றி!
முவுலகமும் போற்றும் முக்கண்ணன் மைந்தனே
முக்தியை நல்கிடும் முத்துகுமரனே போற்றி
போற்றி!
பழனியில் அமர் பாலமுருகனே
மைந்தமிழ் பாவலரின் பாட்டுடைத் தலைவனே
போற்றி போற்றி!
படைவீடு கொண்ட பன்னிருகையனே
பழமுதிர் சோலை அருள் சரவணபவனே போற்றி
போற்றி!
அன்பர்களை ஆட்கொள்ளும் ஜங்கரன் சோதரனே
ஆண்டிகோலம் பூண்ட கிரிகுகனே போற்றி போற்றி!
அவ்வைக்கருளிய சோலைமலையனே
அறுபடை வீடமர்ந்து அருள் தனைவழங்கிடும்
அருள்வள்ளளே போற்றி போற்றி !
ஆக்கம்:கிருஷ்ணவேணி உதயகுமார்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.