"நாளை நமதே"
பொன்விழா கண்ட பெருமிதத்துடன்
நம் நாட்டின் மணிக்கொடி
நல்லோர் வாழ்த்துரையில்
நிமிர்ந்து பறப்பதைபாரீர்!
தரணியில் இவ்வன்னை பூமிக்கு
தொண்டாற்றிய தன்னலமற்ற
தியாகிகளையும் போற்றுதற்குறிய
பெருந்தலைவர்களையும் இந்நாளில்
நாம் நினைவுகூர்ந்து அவர் தம்
பெற்று
தந்த சுதந்திரத்தை பேணிகாத்து
புதியதோர் பாரதம் படைக்க புறப்பட்டு வாரீர்!
வருங்கால மன்னர்களே, சிங்கங்களே,
நம் நாடு பலதுறையில் வளம் பல சிறக்க
துணிவும் துடிப்பும் நுண்ணறிவும் உள்ள
இளைய தலைமுறையினரே! இன்முகத்துடன்
எழ்ச்சி மிகு பாரதம் படைத்திடவாரீர்!
நாம் அனைவரும் ஒன்று கூடி
வலிமை மிகு இந்தியாவை உருவாக்கிடுவோம்
நல்லறம் செழிக்கக் பல் துறைகளில் நாம்
சிறந்து விளங்கிட மாற்றங்கள் பல கண்டு
ஏற்ற மிகு இந்தியாவின் புகழ் வானளாவி நிற்க
இந்நன்நாளில் நமது பாரதம் வலிமை மிகு
வல்லரசாகிட விரைந்து செயலாற்றி
வெற்றி காணுவோம் வாரீர் !
வாழ்க் பாரதம்! வாழ்க் வையகம் !
வாழ்க மணித்திரு நாடு!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
ஆக்கம்: கிருஷ்ணவேணி உதயகுமார்

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.