Contributors

Tuesday, 5 February 2013

அருணகிரிநாத சுவாமிகள் திருவாய்மலர்ந்தருளிய


அருணகிரிநாத சுவாமிகள் திருவாய்மலர்ந்தருளிய
           திருப்புகழ்
              வெண்பா
திருப்புகழைக் கற்கத் திருப்புகழைக் கேட்கத்
திருப்புகழை நித்தஞ் செபிக்கத்-திருப்புகழை
அற்ச்சிக்க முத்தியெளி தாகுமே கூற்றைவென்று
கெர்ச்சிக்க லாமே கெடி.
     விநாயகர் துதி
உம்பர் திருத் தேனுமணிக்        கசிவாகி
ஒண்கடலிற் றேனமுதத்                     துணர்வூறி
இன்பரசத் தேபருகப்             பலகாலும்
என்றனுயிர்க் காதரவு           றருள்வாயே
தம்பிதனக் காகவனத்           தணைவோனே
தந்தைவலத் தாலருள்கைக் கனியோனே
அன்பர் தமக் கானநிலைப்        பொருளோனே
ஜந்துகரத் தானைமுகப்               பெருமாளே. 

கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொறி
 கப்பிய கரிமுகன்             அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியி லுரைபவர்
கற்பகம் என்வினை                கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திறள்புய              மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு            பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட யெழுதிய                     முதல்வோனே
முப்பூர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது போடிசெய்த               அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை                இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள்               பெருமாளே. 


திருப்பரங்குன்றம்---1 வது படைவீடு   
உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை
   உரைத்தி லன்பல மலர்கொடு னடியினை
   உறப்ப ணிந்தில ருதவ மிலனுன                  தருள்மாறு  
உளத்து ளன்பின ருறைவிட மறிகிலன்
விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன்
உவப்பொ டுன்புகழ்  துதிசெய விழைகிலன்            மலைபோலே
கனைத்தெ ழும்பக டது பிடர் மிசைவரு
     கறுத்த வெஞ்சின மறலித னுழையினர்
     கதித்தடர்ந்தெறி கயிறடு கதைகொடு         பொருபோதே
கலக்கு றுஞ்செய லொழிவற அழிவுறு
     கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்
     கணத்தி லென்பய மறமயில் முதுகினில்           வருவாயே
வினைத்த லந்தனி லலகைகள் குதிகொள
     விழுக்கு டைந்துமெ யுகுதசை கழுகுண
விரித்த குஞ்சிய ரெனுமவு ணரையமர்        புரிவேலா
மிகுத்த பண்பயில் குயில்மொழி யழகிய
     கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை
விரைத்த சந்தன ம்ருகமத புயவரை               யுடையோனே
தினத்தி னஞ்சதுர் மறைமுனி முறைகொடு
புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு
சினத்தை நிந்தனை செயுமுனி வரர்தொழ          மகிழ்வோனே
தெனத்தெ னந்தென எனவரி அளிநறை
     தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழினிறை
திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண                      பொருமானே
     
       சந்ததம் பந்தத்                            தொடராலே
         சஞ்சலந் துஞ்சித்                         திரியாதே
       கந்தனென் ன்றுற்                         றுனைநாளும்
    கண்டுகொண் டன்புற்                     றிடுவேனே
  தந்தியின் கொம்பைப்                           புணர்வோனே
    சங்கரன் பங்கிற்                         சிவைபாலா
  செந்திலங் கண்டிக்                        கதிர்வேலா
    தென்பரங் குன்றிற்                      பெருமாளே.



No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.