உலகில் அதிசய தென்கைலாய சஞ்சீவி திரி சூலகிரி பர்வதமலை மகிமகள்
1. அன்னையும் பிதாவும் முன்னறி
தெய்வம், தாய், தந்தையரை வணங்கிவிட்டு இம்மலைக்கு வருவது சிறந்தது குலதோஷ்த்தை
தீர்க்கும் அபூர்வமலை.
2. ஆணைமுகன், ஆறுமுகன், ஜயப்பன்,
மல்லிகார்ஜுன சுவாமி, அன்னை பிரம்மராம்பிகா ஆகியோர் குடும்ப சகிதமாய் காட்சிதரும்
மலை.
3. இமயத்திலிருந்து ஈஸ்வரன்
முதன்முதலாக காலடி வைத்த மலை.
ஏழு சடைப்பிரிவு கொண்ட மலை .
4. ஈஸ்வரனுக்கு உகந்தது
வில்வம். ஒவ்வாதவை ஊமத்தை எருக்கமலர் தாழம்பு.
5. உண்மையான சிவபக்தர்களின்
லட்சணம் விபுதிஅணிவது, வெள்ளை , காவி, மஞ்சள்
உடை அணிந்து வருவது சிறப்பு. லுங்கி, பேன்ட் தவிர்க்க.
6. ஊருக்கு உன் வேஷங்கள்
அனைத்தும் தெரியும்.நல்லவன்போல்நடிப்பதை நிறுத்திவிட்டு உன் மனதில் எழும்
ஊந்த்தைப் போக்க பர்வதமலை ஈசனை தரிசிப்பது சிறந்தது.
7. எல்லா தெய்வங்களின்
பெயராலும் இப்பர்வதமலையை சுற்றி மலைகள் இருகின்ற்ன், எட்டுத்திசைக்
கோயில்களுக்கும் நடுவன் உமை (பாவத்தி மலையில்) இருக்கிறாள்.
8. ஏழு ஊர்களில் இம்மலையின்
கீழ் ஸபித் கரைகண்ட ஈசன் ஆலயங்கள்
உள்ளன (காஞ்சி,கடலாடி,மாம்பாக்கம்,தென்மாதி மங்களம்,பூண்டி,குருவிமலை
எல்த்தூர்)
9. ஜம்பூதலங்களில் அக்னி
தலமாகிய திருவண்ணாமலையிலிருக்கு 25கி.மி தூரத்தில் உள்ளது தென்மாதி மங்களம் அவ்வூரின் அருகில்தான் பர்வதமலை உள்ளது.
10. ஒரே மலைக்கு பல பெயர்கள்
பர்வதமலை சஞ்சீவிமலை கந்தமலை மங்கள மலை திரிசூலகிரிமலை தென்கயிலாயம் அகத்தியாமலைஎன
11. ஓம் நமச்சிவாயா,ஓம்சக்தி
பரவதகிரி பராசத்தி ஓம் ஹரஹரா என்று விண்ணைமுட்டும் கோஷத்துடன் பக்தர்களின் கூட்டம்
பவுர்ணமி பகல் இரவு முழுவதும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.
12. காஞ்சிப் பெரியவர்,
பூண்டிமகான் வடநாட்டின் ஸ்ரீ பாத்ஜ சுவாமிகள்,
போன்ற புண்ணிய சீலர்களின் பொற்பாதங்கள் பட்டமலை.
13. பர்வதராஜ்குமாரியையும், பரமனையும் பக்தியுடன் வழிபட்டால் எப்பிணியும், எத்துயரும், எக்குறையும் சண்டமாருதக் காற்றில் அகப்பட்ட பஞ்சுபோல பறந்து போகும் என்பது
நம்பிக்கை.
14. புண்ணியம் செய்தோரே
இம்மலையுச்சிக்குப் போக இறையருள் பெறுகின்றார்.வீண்பேச்சில் மீசை
முருக்குபவரேல்லாம் பாதியில் திரும்புவதைக் காணலாம்.
15. சரியை, கிரியை யோகம்,ஞானம்
இந்நான்கும் மேலோர்க்ளால் அங்கீகரிக்கப்பட்ட ஆத்மசாதனங்கள் ஆண்டவனுக்கும்,
ஆருயிர்களுக்கும்
பணிவிடை பண்ணுவது “கிரியை” அதை பணிவுடன் செய்வது நல்லது
16. இம்மண்ணுலக வாழ்க்கையில்
உயிர்களுக்கு நிலைத்த ஆதரவு ஒன்றுமில்லை மக்கள் இங்கு பெறுகின்ற ஆதரவு
தற்காலிகமானவை. சிவம் நிலைத்தது.
17. நதிக்கு புகலிடம் கடல், மக்களுக்கு
புகலிடம் பரம்பொருள். இவனைக்கானவும், புகழைக் கேட்கவும் அவன் வாழும் பர்வதமலை
செல்வோம்.
18. எத்தனையோ --த்திர
மகாத்மியங்கள் கேட்டும், பார்த்தும், படித்தும் இருக்கிறோம். இந்த
திரிசூலகிரி மகாத்மியத்தில் கட்டுக்கதைகள் ஒன்றும் இல்லாதது.
19. பர்வதமலைக்கு புராண ஸ்தல
வரலாறு உண்டு. திரிசூலகிரி புராணம் என்று இதற்கு பெயர் .புராணம் ஸ்தல வரலாறு என்பது --தரம், மூர்த்தி, தீர்த்தம் இவைகளின் சரித்திர
வரலாறு.
20. யார்,யார் எந்தெந்த
ஸ்தலங்களில் விளங்கும் கடவுளை எந்தெந்த விதத்தில் வழிபட்டு எப்பெர்பட்ட பயனை
அடைந்தார்கள் என்பதை நமக்கு தெரிவிக்கின்றது.
21. முருகப் பெருமான் சூரபதுமனை
அழித்து ஒருபாகத்தை சேவலாகவும், மறுபாக்த்தை மயிலாகவும் தம்மிடமே வைத்து கொண்டதால்
பிரமத்தி தோஷமும் சிவதோஷமும் சேர்ந்தது.
22. இந்த தோஷங்களை
நீக்குவதர்காக பலதலங்க்ளில் வணங்கியும், தீர்த்தங்களில் நீராடியும் தீராமல்
பர்வதமலைக்கு அருகே வர பிரமத்திதோஷம் நீங்கியது சிவதோஷம் நீங்கவில்லை.
23. சிவ்புருமான் முருகன் முன்
தோன்றி குழந்தாய் இம்மலையின் கீழ் ஏழு ஸப்தகரை கண்டலிங்கங்களை பிரதிஸ்டை செய்து
பூஜித்து வர உன் சிவதோஷ்ம் நீங்கும் என்றாராம்.
24. முருகப்பெருமான் பிரதிஷ்டை
செய்த ஏழுலிங்கங்களையும் ஏழு முனிவர்கள் சென்று வணங்கியுள்ளனர்.
25. ஏழு முனிவர்கள் காசிபர்,
ஜமதக்னி வசிஷ்டர், கவுதமர், அத்தரி,
பரத்துவாசர்,விசுவாமித்திரர் ஆகியோர்.
26. ஏழு ஊர்களில் ஏழுலிங்கங்களை
பிரதிஷ்டை செய்து முருகப் பெருமான் வணங்கியதால் கந்தமலை என்று பெயர்.
27. பர்வதராஜானின் மகளான
பர்வதராஜ்குமாரியை திருமணம் செய்தபோது தேவர்கள் ஒரேயிடத்தில் கூடியதால்
நிலச்சமன்பாட்டிற்கு.இதற்கு முன் (பொதிகைமலை) அனுப்பியது போல் இம்முறை
பர்வதமலைக்கு அக்த்தியரையே அனுப்பி சமன் செய்தார்
28. அகத்திய முனிவர் இம்மலையில்
திரிசூலத்தை நிறுத்தி இந்த அற்புதத்தை நிகழ்த்தியதால் அகத்தியமலை என்றும் பெயர்
வரலாயிற்று.
29. திருமாலை திருமணம் புரிய
மகாலட்சுமி பலயிடங்களில் தவம் செய்தும் நிறைவேறாமல் இப்பர்வதமலையை தேர்ந்தெடுத்து
தவம் செய்ய பலித்தது.
30. இன்றும் இம்மலைக்கு சென்று
வருபவர்கள் ஒவ்வொருமுறை சென்று வரும்போது மேலும் மேலும் தம்முடைய செல்வம் உயர்வதை
காண்கிறார்கள்.
31. செல்வத்திற்கு அதிப்தியான்
மகாலட்சுமியின் எண்ணம் இம்மலையில் செய்த தவத்தால் ஈடேறியதால் இம்மலை மங்கள மலை என
விளங்கப்பெறுகிறது.
32. தேவலோக மங்கையர் யோகவதி,
சலாவதி சிவபெருமான் அழகில் மயங்க பார்வதி தேவியின் சாபத்திற்கு ஆளாகி, சாபவிமோசனம்
வேண்டி அவ்விருவரும் தவம் செய்ய கோபம் கொண்ட இந்திரன் பெரும் மழை வெள்ளத்தை
உண்டாகக், வெள்ளத்தை சிவபெருமான் தம்
திருமேனியில் தாங்கிக் கொண்டு சாபவிமோசனம் அளித்தார்.
33. யோகவதி சலாவதி ஆகியோரின்
சாப விமோசனத்திர்காக, வெள்ளத்தை தம் திருமேனியில் தாங்கியதர்காக்
வெள்ளந்தாங்கீஸ்வரர் என்ற பெயருடன் இன்றும் விளங்கப்படுகிறது.
34. விசுவாமித்ர மகரிஷி
இம்மலைக்கு வந்து இறைவனை வணங்கிவிட்டு , இம்மலையில் உள்ள திருக்கோயிலுக்கு
தேர்செய்து வைத்து உற்சவம் நடத்தியுள்ளார்.
35. விசுவாமித்தீரர் வந்து
தங்கிய இடத்தை இன்றும் இவ்வூர் மக்கள் விசுவாமித்ரன் குன்று என்று அழைக்கிறார்கள்.
36. முருகப்பெருமான் நில உலகில்
முதலில் கண்டு வணங்கிய ஸ்தலம்கேதார்நாத் இரண்டாவது காசி மூன்றாவது பர்வதமலையாகும்.
37. கந்தபுராணத்தில் “வழிநடைபடலத்தில்” கேதார்நாத்தையும்,காசியையும் கந்தவேல் கண்டருளினார் என்றும் பர்வதமலையை
கண்டருளியதோடு அங்குள்ள அற்புதங்களை தெரிந்துகொண்டார் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
38. நந்திகேஸ்வரர் தாமே மலையக இருந்து
தன்னுடைய சிரசின் மீது சிவபெருமான் வீற்றிருக்க் வேண்டும் என வரம் வாங்கியுள்ளார்.
39. இன்றும் பர்வதமலை நந்தியின்
வடிவமாக காட்சியளிப்பதையும், எம்பெருமான் கோயில், அவரின் சிரசின் மீது
இருப்பதையும் காணலாம்.
40. தம்முடைய சீடர்களுடன்
இம்மலையில் உள்ள இறைவனைக் காணவந்த ஒரு குரு தாம் போய் நீராடி விட்டு வருவதற்குள்
சீடர் ஒருவர் வாலிபனாய் மாறிய செய்தி அறிந்து அந்த சஞ்சீவி குச்சியை எங்கு
தேடியும் கிடைக்கவில்லை இதனால் சஞ்சீவி மலை என்றும் பெயர்.
41. சூதமா முனிவரிடம்
நைமிசரண்யம் என்னும் காட்டில் வசிக்கும் முனிவர்கள், அறம், பொருள், இன்பம்,
மோட்சம் ஆகியவற்றை ஒரேயிடத்தில் அளிக்கக்கூடிய ஸ்தலம் எது என கேட்க பர்வதமலையை
சொல்லியுள்ளார்.
42. திர்க்கைலாயத்தில் என்னென்ன
அதிசயங்களும் அம்சங்களும் உள்ளனவோ அத்தனையும் இம்மலையில் உண்டு என எம்பெருமான்
முமுங்குகிறார்.
43. தேவர்களும் முனிவர்களும்
சித்தர்களும் கைலாயத்தில் உள்ளது போலவே இங்கும் உள்ளனர். அவர்களின் தரிசனம் பெற்ற
பாக்கியசாலிகள் பல பகுதிகளும் இன்றும் உள்ளனர்.
44. இம்மலையில் வாசம் செய்யும்
சித்தர்கள் மணி என்ற மூலிகையை வாயில் உருட்டிப்போட்டுக்கொண்டு தாங்கள் நினைத்த
இடத்திற்கு போய்வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.
45. கி.பி 3-ஆம் நூற்றாண்டில் நன்னன் என்னும் அரசன் இங்குவந்து இறைவனை வணங்கியதாக
“மலைபடுகடாம்” எனும் நூலில் உள்ளது.
46. இம்மலையில் உங்கள்
பாதம்பட்டதும் உங்கள் கருங்கல் மணமும்கசிந்துருக, நெஞ்சம் தொடுமணர் கேணிபோல் அருள்நீர் கரந்துபாய் அன்பர்
ஆவீர்.
47. எதையறிந்தால் நம்
அறிவுமுற்றுப்பெருமோ அதை அறிய முயற்சிப்பதே அறிவுடைமை அனைத்தையும் படைத்த ஆண்டவனை
அறிந்தால் அவர் படைத்த அனைத்து ஆண்டங்களின் ரகசியங்களும் தானாகவே புரியும்.
48. பஞ்சபூதங்களுடைய அணுக்களின்
(நீர், நிலம், வாயு அக்னி, ஆகாசம்) சேர்க்கையே இந்த பூத
உடல், .பஞ்சபூதங்களுக்கும் அதிபதி
எம்பெருமான் சிவபெருமான்.
49. நீர் –திருவானைக்கா, நிலம்-காஞ்சிபுரம், வாயு- ஸ்ரீ காளஹஸ்தி, அக்னி-திருவண்ணாமலை,ஆகாசம்-சிதம்பரம்
50. பரந்து கிடக்கும் இந்த
உலகத்தை ஆயிரம் ஆயிரம் அற்புதங்களை உடையதாக்கிய் இறைவன்,இப்பர்வத மலையையும்
மனிதகுலத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக தந்துள்ளார்.
51. சஞ்சீவி பர்வத மலைக்கு
குடும்பத்துதடன் விஜயம் செய்து இரவு தங்கிச் செல்லவும், இரவில் பல மகிமைகள்
காணலாம்
52. பிரதி மாதம் பவுர்ணமி பூஜை
சிறப்பாக நடைபெறுகிறது.தமிழகத்தின் பல பாகங்களிலிருந்தும் கர்நாடகா
ஆந்திராவிலிருந்தும் பக்தர்கள் கூட்டம் திரண்டு வருவதையும் காணலாம்.
53. 48 பவுர்ணமி, அமாவாசையில் எவர் தொடர்ந்து வந்து இறைவனை வ்ழிப்டுகிரார்க்ளோ அவர்
ஞானம் பெறுவது திண்ணம்.
54. தென்மாதிமங்கலம் கிராம்
நுழைவாயில் பேருந்து நிலையம் இறங்கி அதனுடே பர்வதராஜ்குல வீதிவழியே வரசித்தி
விநாயகரை வழிபட்டு அதே வழியாக் மலைக்கு பயணம் மேற்கொள்ளலாம்.
55. வழியில் பச்சையம்மனையும்,ஏழு
பெரிய முனீஸ்வரர்களையும் வணங்கி மீண்டும் பயணம் தொடரலாம்.
56. வழிநேடுக காவல் தெய்வங்கள்,
வன தேவதைகள்,நந்தீஸ்வரன்,அகோர வீரபத்திரர்,ரேணுகாதேவி,வனதுர்க்கை கண்டுகளிக்க
பரவசம்.
57. மலையின் காவல் தெய்வமான
அகோர வீரபத்திரரை வணங்காமல் செல்வது மலைக்கு போயும் புண்ணியமில்லை என்று பெரியவர்கள்
கூறுகின்றனர்.
58. மலையின் மேலே செல்லசெல்ல
அடி அண்ணாமலையார், சஞ்சீவிகாற்று,பாதி மண்டபம்,கடப்பாறைப்படி,ஏணிப்படி,
தண்டவாளப்பாடி, சுழ்ல்பாறை,தீட்டகாரிமண்டபம், பாதாளச்சுனைக்கின்று,கணக்கச்சி
ஓடை,பிள்ளையார் பாறை என தொடர்ந்து இறைவனின் திருக்கோயிலை அடையலாம்.
59. மலை உச்சியில் ராட்சத
திரிசூலம் (10அடி உயரம்) உள்ளது.
60. 365 நாட்களிலும் மலைக்குகையில் மகான் மவுனயோகி “விடோபானந்தர்” தவமிருந்து
வருகிறார். அகண்டதீபம் 24 மணிநேரமும்
எரிந்துகொண்டிருக்கிறது.
61. தலைக்கு மேலே மேகம்
தவழ்ந்து போவதைக் காணலாம் .
62. கன்யாகுமரி போன்று இங்கும்
சூர்ய உதய அஸ்தமனத்தை காண கொள்ளாகாட்சி.
63. கோயில் கதவுகள்,குருக்கள்
இல்லாத மலை.
64. வடநாட்டில்அவரவர்
இறைவனுக்கு அபிஷேகம் செய்வதுபோல் இங்கும் அவரவரே அபிஷேகம் செய்வது பெரிய
புண்ணியம்.
65. நடுநிசி பூஜையில் அம்மன்
கருவறை முதல் கோயில் முடிவுவரை எதிரே பின்னோக்கி செல்ல செல்ல அம்மன் உயரம்
படிப்படியாக உய்ருவதை பார்க்கலாம் (அம்மன் நிஜமாக் வருவது போன்ற பிரமிப்பு).
66. ஸ்ரீ சிவபெருமான் எதிரே
கரபூரம் ஏற்றி வெளியே நின்று க்ர்பூரஜோதியை
நோக்கினால் ஜோதியில் நாகம் சூலம் உடுக்கை பிம்பம் தோன்றுவதைக் காணலாம்.
67. அன்னை பராசக்தி பேரழகு
வேறெங்குமே கான்முடியாது கன்னத்தில் ஜோதி ஒளி காணலாம்.
68. இரவிலே ஜோதி தரிசனம்
காண்பிக்கும் மலை பலபேருக்கு சிவம் கருவறையிலிருந்து ஜோதி செல்லும் காட்சி
கிடைத்துள்ளது.
69. இம்மலைக்கு சாரைசாரையாக
வரும் மக்களை காட்டுமிருகங்களோ,விஷ்ப்பூச்சிகளோ தாக்கியதாக இதுவரையில்லை.
70. பால் பூஜைதான் இங்கு
உகந்தது உயிர்பலி கிடையாது.
71. அமாவாசையில் பக்தர்களுக்கு
அடிவாரம் முதல் உச்சிவரை உறவில் இறைவனுடைய ஒளி வழி காண்பித்து வருவது தமிழகத்திலே
இங்கு ஒன்றுதான்.
72. திருக்கழுக்குன்றம் போல்
இங்கும் ஆறு கழுகுகள் மலையைச் சுற்றியவண்ணம் உள்ளதைக் காணலாம்.
73. 9 அடி ராஜநாகம் எப்போதாவது இங்கு சிவனையும் அம்மனையும் வலம் வந்து செல்கிறது.
நேரில் கண்டவர்கள் திருலட்சுமண் AFT மில் :பாண்டி ,திரு
பார்த்தசாரதி,கீழ்விஷாரம்.
74. மலையுச்சியில் நடுஜாமத்தில்
தாரை தப்பட்டை மேளம் சங்கு ஷாமகளம் ஓசை கீழே மலையை சுற்றியுள்ள கிராமங்களில்
பலபேருக்கு கேட்டுள்ளது எங்க கூறுகின்றனர்.
75. பர்வதமலையில் ஒரு நாள்
தீபமேற்றி அபிஷேகம் செய்தால் கீழே 365நாள் பூஜை செய்த பலன்
கிடைக்கும். எலுமிச்சம் பழம் மலை நினைத்ததை முடிக்கும்.
76. சித்ரா பவுர்ணமி, ஆடி 18 ஆடிப்பூரம் பாலபிஷேகம், புரட்டாசி 1 (நாதஸ்வரம் மேளவித்வான்கள்
மேஜை)ஜப்பசி அன்னாபிஷேகம் கார்த்திகை தீபம் மார்கழி 1தை பொங்கல் மாசி
சிவராத்திரி பங்குனி உத்திரம் முதலிய விழாக்கள் உண்டு.
77. மலையில் கடப்பாறை நெட்டு
என்ர்யிட்த்தில் ஒவ்வொரு கடப்பாறை கம்பிகளையும் ஒன்று மாற்றி ஒன்று பிடித்துக்
கொண்டு முன்னேறுவதால் தொங்குபை (முதுகில்) எடுத்துச் செல்வது நல்லது.
78. மலையேறுவதால் நாக்கு வறட்சி
ஏற்படும் சமயம் தண்ணீர் தேவை பாட்டில்களிலோ பாக்கட்களிலோ தண்ணீர் எடுத்துச்
செல்லவேண்டும்.
79. அடிவாரத்திலிருந்து
உச்சிவரை செல்ல சிறிதுகாலம் ஏற்பட்டு ப்சிக்க் நேரலாம் ரொட்டி ஜாம் குளுக்கோஸ்
எடுத்து செல்வது நல்லது.
80. பக்தர்கள் இறைவனை
தரிசித்துவிட்டு கீழேயிறங்கும்போது முண்டியடித்துக்கொண்டும், தகாத வார்த்தைகளை பயன்படுத்திக்கொண்டு வருவதும் தவறானது.
81. இறைவனின் சன்னிதானத்தில்
கால அவகாசம் முக்கியமில்லை வழியில் அடுத்தவரை தடுமாறும்போது ஏற்றிவடுவ்தும்
இர்க்கிவிடுவ்துமே ஒரு பெரிய புண்ணியம் வசைபாடுவது புன்னியமாகாது.
82. எந்த குறையிருந்தாலும்
இம்மலைக்கு 5(அ) 7(அ) 9 முறை விஜயம் செய்து தீபம்
போட்டு வணங்கினால் எல்லாம் தீரும்.
83. குழந்தை வரம் வேண்டுவோர்
திருமணம் வேண்டுவோர் மார்கழி –ந் தேதி கிரிவலம் வருவது இங்கு மிகவும் சிறப்பு.
84. பரவத மலையை வளம்
வருபவர்கள் ஞாயிற்றுகிழமை வளம் வந்தால் கடன் தீரும்.
85. திங்கட்கிழமை வலம்
வருபவர்க்கு பதவி கிடைக்கும்
86. செவ்வாய்கிழமை வலம்
வருபவர்க்கு பகைவரை வெல்வர்.
87. புதன்கிழமை வலம்
வருபவர்களுக்கு இறைவனின் முமுக்கருனணயும் கிடைக்கும்.
88. வியாழக்கிழமை வலம்
வருபவர்க்கு சந்தோஷ்ம் உண்டாகும்.
89. வெள்ளிக்கிழமை வலம்
வருபவர்க்கு பில்லைப்பெரும் செல்வமும் உண்டாகும்.
90. சனிக்கிழமை
வெள்ளந்தாங்கிஸ்வர்ரையும் சேர்த்து வலம் வருபவர்க்கு மூன்று லோகங்களையும்
வணங்கக்கூடிய தன்மை ஏற்பட்டு சிவனுடன் இனிதாக இருப்பர்.
91. யார் தன் முழங்கால்களாலும்,
இரண்டு கைகளாலும், நெற்றியும் தரையில் தோய பெற்றோர்களயும் கடவுளையும் வணங்குவரையின்
அழியாத சொர்க்கத்தை அடைகிறார்கள்.
92. கண்கண்ட தெய்வமான தாய்தந்ததையரை
மதிக்க தவறுபவர்கள் கண்களால் காண இயலாத தெய்வத்தின் மீது பக்தி செலுத்துபவர்போல
நடிப்பது தெய்வத்தை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபடுவதாகும் மனத்தூய்மையுடன்
வணங்கினால் நினைத்தது நடக்கும்.
93. இம்மலையில் பசித்து வந்த
ஒருவருக்கு நாம் உணவளித்தால் அவர் ஊண் குளிர்கிறது உள்ளம் குளிர்கிறது.உயிர்
குளிர்கிறது அந்த உயிருக்கு உயிராக் உள்ளே வசிக்கும் சிவம் குளிர்கிறது.
94. தீராத நோயினால்
வருந்துபவர்கள் தங்கள் ச்க்திகேற்றவாறு இம்மலையில் பசித்தோர் முகம் பார்த்து
அன்னமளிப்பது மிக புண்ணியம் அந்நோய்க்கு அன்னதானமே நல்ல மருந்தாக அமைந்து
நோய்நீங்க வழியுண்டு.
95. சிவபெருமானே மலை வடிவமாக
வீற்றிருப்பதால் மலையைச் சுற்றி நந்தவனம் பூஞ்சோலை மண்டபம் ஆலயம் ஆகியவை
அமைப்பவர்கள் இந்திரபதம் பெறுவர்.
96. எந்நாளி,லும் எந்த
திதியிலும் எந்த நட்சத்திரத்திலும் வலம் வரலாம்
97. இம்மலையை சுற்றியுள்ள
தீர்த்தங்கள் மற்றும் நதிகளில் நீராடி ஏழு காள கணடலிங்கங்களையும் முறைப்படி
பூஜித்து இந்தரலிங்கத்ததை வணங்கி னோம்னால் அனைத்து பலனும் கிடைக்கும்.
98. கலியுகமென்னும் கடுமையான
மாய இருட்டில் மின்னல் ஒளிபோல் தன்னையும் சித்தர்கனளுயம் அதிக்கடி காட்டியும்
மறைத்தும் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு அற்புதமான இடம்
99. உலகெலாம் உணர்ந்து
ஒதக்கறியவனின் அரும்சக்தி அண்டமெல்லாம் பரவி நின்றாலும் ஒரு சிலயிடங்களில்தான்
அவன் அதிர்வை உணரமுடிகிறது
100. சுவாமியே விபூதி விபூதியே
சுவாமி சுவாமிக்கு எவ்வளவு கல்யாண குணங்கள் உண்டோ அவ்வளவு கல்யாண குணங்கள் சுவாமி
விபூதிக்கும் உண்டு
101. வில்வத்தைக் கொண்டு 365 நாள் சிவப்பெருமானுக்கு அர்ச்சனை செய்தால் மகாபாவங்கள் நீங்கும்.
102. வில்வம் சிவசொருபம்,
வில்வதில் மகாலட்மி வசிக்கிறாள்.
103. வில்வத்தை சோமவாரம் பௌர்ணமி,
அமாவாசை, சதுர்த்தி தினங்களில் பறிக்ககூடாது.
104. கடலாடி வழி 7 கி.மீ. தூரம் உடையது. கடலாடி ஏரிக்கரை கிழே பம்புசெட் உள்ளது. வெளியூர்
அன்பர்கள் தங்கவும் மேலே செல்லவும் பம்பு செட் உரிமையாளர் வள்ளல் திரு. கோபால் முதலியார் எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருவார்.
105. தென்மாதிமங்கலம் வழி 10 கி.மீ தூரம் உடையது. போஸ்ட்மேன் திரு. ராமசந்திரன் மலைக்கு போக தேவையான
வசதிகள் செய்து தருவார்.
106. சிவசக்தி முடி ஏந்தி
விரதமிருந்து 9 நாட்கள் நோன்பிருந்து இங்கு
வருகிறார்கள்.
107. அம்மனின் வடிவத்தில்
மௌனயோகி வருபவர்க்கு அருளாசி வழங்குவதோடு அன்னதானமளித்து வருபவரை மீண்டும்
மீண்டும் மலைக்கு வரவழைக்கிறார். (சாது தரிசனம் பாபவிமோசனம்)
108. பிறந்தோம் வாழ்ந்தோம்
மறைந்தோம் என்றில்லாமல் இப்பிறவியில் பலரும் பயன்பெறும் வகையில் இறைவனின் அருள்பெற
வேண்டி
உலகில் அதிசய தென்கைலய
சஞ்சீவி திரிசூளகிரி
பர்வதமலைக்கு சென்று வருமாறு
தங்களை அன்புடன் கேட்டு
கொள்ளும் சென்னை சிவ பக்தர்கள்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.