Contributors

Thursday, 13 September 2012

பாமாலை



மந்தனின் மகத்துவம் மண்ணுலக மாந்தர்
மட்டுமின்றி விண்ணகத்தாறும் வியந்து மருளும்
அளவிற்க்கு மகத்தான பேரு பெற்றவனே
ரவிபுத்திரா குளிகனை தனையனாக பெற்றவனெ
சனிதேவா போற்றி போற்றி !
ஆதிசிவன் அருள்கரத்தால் ஆசிபெற்று
தன்நிகறில்லா தனிதன்மை கொண்ட தயாளனே
நவ கோள்களுள் மிக ஒப்புயாவான
ஈஸ்வரன் பட்டம் பெற்ற-பெரும் புன்னியனே
சனீஸ்வரா போற்றி போற்றி !
புவி மாந்தர் வாழ்வில் மங்குசனி
போங்குசனி,மாரகசனியாகவந்து-அவரவர்
விதிக்கேற்ப புலனடங்கி வினைப பயனை தந்து
அவர்கள் வாழ்வில் புகழ்சேர்க்கும்-பெம்மானே
நீதிதேவனே போற்றி போற்றி !
நித்தம் நினை துதிப்போர்க்கு நிம்மதி நல்கிடும் –நீலனே
எள்தீபம் ஏற்ருவோர்க்கு ஏக்கங்கள் போக்கிடும் –தேவனே
கருங்குவளை மலர் கொண்டு கரம் கூவிப்போர்
கஷ்டங்களை களைந்திடும்-கரியனே
காக்மேறும் தம்பிரானே போற்றி போற்றி !
வடிவத்தில் சிறியதாய் பருவத்தில் முதுமைபெற்று
அஷ்டமசனி அர்தாஷ்டமசனி, ஏழரைச்சனி-என
அனைவரின் வாழ்வில் அவரவர்களின் நிலைக்கேற்ப
ஆண்மபலத்தை சீரமைத்து சீர்தூக்கி வெற்றியை
வழங்கிடும் வேந்தனே –போற்றி போற்றி !
சனி என்ற ஈரெழுத்து மந்திரம்-உரைப்போரின்
ஊழ்ழகற்றி உண்மைதத்துவத்தை உணர்த்திடும்
உத்தமனே, உமாபதிஉளமகிழ் நேசனே
காகவாகனனே -போற்றி போற்றி !
நின்னை அனுதினம் துதிப்போர்த் துயர்நீக்கி
நிம்மதி நல்கிடும் நிமலனே
ஆருயிர்க்கெல்லாம் அருள்தனை வழங்கும் அருளோனே
பரமனை பணிந்து போற்றும் பண்பாலனே
சனீஸ்வரா போற்றி போற்றி !
குச்சானூர் பெரிச்சிக்கோவில் திருநள்ளாறு
திருகொள்ளிக்காடு போன்ற திருத்தலங்களில்
வீற்றிருந்து தன்னை நாடிவரும் பக்தர்களின்
சனிதோசம் நீக்கி வாழ்வில் மங்களம் பொங்கிட
வரம்தனை வழங்கும் சனீஸ்வரா-போற்றி போற்றி !.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.