Contributors

Thursday, 13 September 2012

1. உலகம் உய்ய ஒரு பெருவழி பக்தியே



உலகத்தை உய்விக்கவே சூரியன் நாளும் வான்விதியில் வலமாக
உலவிவருகிருன். மரங்களும் நதிகளும் கனிகளையும் நன்னிரையும்
கைம்மாறு கருதாது பிறருக்கே உதவுகின்றன.இவ்வாறு தன்னலம்
கருதாது பிறர்நலம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு பணி புரியும்
சான்றேர் உலகத்தில் உள்ள்மையாலேயே உலகம் நிலைத்துள்ளது.
ஆயினும் இன்று நாம் காண்பதென்ன? எங்கும் பஞ்சமும் நோயும்
பசியும் வருமையுமே அல்லவா? இராமனும்,கண்ணபிரானும்,புத்தரும்
மகாவீரரும், இயேசுநாதரும்,முகம்மது நபியும், வள்ளுவரும் வான்மிகியும் ஆழ்வாரும்,நாயன்மார்களும் மற்றும் பல மதாசாமியார்களும் அவதேரித்த
இவ்வுலகில் இத்தகைய கொடுமைகள்? இவற்றிக்கு காரணம் தான் என்ன?
மக்கள் உள்க்வாழ்க்கைக்கு வேண்டியவைகளையே கற்றுஉண்டு உடுத்து,
உயிர் வாழ மட்டும் விரும்பியே இத்தகைய துன்பத்திற்கு காரணமாகும் ,நாடு இனம், மொழி, நிறம், சாதி, சமயம் பற்றிய மாறுபாடுகளும்,தன்னலம் முதலிய தீய நினைவுகளும் கொண்டுள்ளமையாலேயே இத்தீமைகள்
இன்று தோன்றியுள்ளன. இவற்றைப் போக்கி அனைவரையும் நன்மார்க்கத்தில்
செலுத்த வல்லது யாது? அதுதான் அங்கிங்ம் அனாதபடி எங்கும் தங்கியிருக்கும் இறைவனிடம் இடைவிடாது பக்தி கொள்ளுதல்.
இந்த பக்தி மார்க்கத்திற்கு  நாம எஜ்னம் அவசியம் இந்த நாம பஜனத்திற்கு
பரம்பொருளின் வைபவங்களைக் காட்டக்கூடிய ஸ்தோத்திரகள் அவசியம்
எனவே புராதனமான ஸ்தோத்திரங்களிலிருந்து முக்கியமானவைகளைத்
தேர்ந்தெடுத்து, தமிழ் எழுத்துக்களில் இங்கு அச்சிட்டிருக்கிறோம்.இந்த
ஸ்தோத்திரங்களை நித்யப்படி பூஜைகளிலும், பண்டிகை தினங்களிலும்,
கோயில்களிலும் பாராயணம் செய்வதால் ஆஸ்திகர்கள் இந்த ஜன்மத்தில் பரம் ஸெளக்யத்தை அடைவார்கள் என்பது திண்ணம்.    

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.