“உணவின் தூய்மை குறித்து
ஸ்ரீ சிருங்கேரி ஆசார்யாள் பொன்னுரை”
உலகில்
சாப்பிடாம்லிருப்பது முடிய்டாது. சரீரம் நிலைப்பதற்காக எப்படிச் சாப்பிடுவதென்பதைத் தெரிந்துகொள்வதுடன் எவை
அருந்தத் தக்கவை,எவ்விதமாகச் சாப்பிட் வேண்டும்மென்பதையும்
புரிந்துகொள்ளுதல் நலம்.
பகவத்பாதாள் ஸ்தஸ்லோகியில்,இதனைக் குறித்து
விவரித்துள்ளார்கள்.
முதலாவதாக,கண்ட
சாமான்களை கண்ட இடத்தில் சாப்பிடக்கூடாது,
உண்ணும வகை குறித்து நம் சாஸ்திரங்கள் எம்முறை
கைப்பற்ற வேண்டும்
என்பதைத் தெளிவாக்குகின்ற்ன.
உலகம்
தானாக ஏற்படவில்லை என்பது ஆஸ்திகக் கருத்து.அது ஒரு
காரிய காரணமாகவே ஏற்பட்டது. லோகநாயகன் இதனைச்
சிருஷ்டித்து
மக்களுக்குப் பஞ்ச இந்திரியங்களையும்
ஆத்மாவையும் கொடுத்தார் சுகவாழ்விற்கு வேண்டிய ஏற்பாடுகளையும் செய்தார் இதனை உணராது
பகவான் ஞாபகமே இராது வாழ்தல் தவறு.
ஆண்கள் கட்டலாம்,கால்வாய்கள் வெட்டலாம், பருவ
மழையில்லையெனில்
யாது பயன்? லோகநாயகன் சகாயமின்றி ஒன்றும்
செய்யமுடியாது.
இதை உணர்ந்து மக்கள் ஒருவருக்கொருவர் ஒத்தாசை
செய்து உணவு சம்பாதித்து எல்லோரும் சன்தோஷ்மாகச் சாப்பிடவேண்டும். எகாங்கியாய்
வாழ்வதில் சுகம் கிடையாது. சற்றுச் சிந்தித்துப்
பார்த்தால், நீ,
மற்றேருவருக்காகவே ஆகாரம் தேடுகிறய் என்பது
புலனாகும்.வீட்டில் உள்ள
குழந்தைகளும் மற்றவர்களும் சுகமாயிருந்தால்.
தானும் சுகவாழ்வு வாழ
முடியும் என்ற எண்ணம் இருக்கிறது. ஏகாங்கியாயிருந்தால்
சுகமாய் வாழ
முடியாது.
இஷ்ட
காம்யங்களை நமக்குக் கொடுக்கக் சித்தமாயிருக்கும்
பகவான் அளித்த வஸ்துக்களை, அவருக்கு முதலில்
நிவேதனமாக
அளிக்காது சாப்பிடுபவர் திருடனுக்குச்
சமானமாவர். ஆண்டவனுக்கு அர்ப்பித்துச் சாப்பிட் வேண்டும்.தேவதை அதிதிக்ளுக் அளித்த
பிறகு,
மிச்சத்தைச் சாப்பிட்டால் சர்வ பாவங்களும்
அகலும்.அப்படிச் செய்யாதவன்
அறிவில்லாதவன், அவன் சாப்பிடட் அன்னம்
வியர்த்தம். அவன் மிருத்யுவை உள்ளே காப்பாற்றி வருகிறன். வத்ததெல்லாம் தனக்குப்
போதாது என்று
எண்ணுகிறான். இவனுக்குப் பாபம் துர்ப்புத்தி
அதிகமாகும்.
உணவு தயாரிக்க ஆரம்பித்து அடுப்பில்
வைக்கும்போதே தேவதா
விநியோகத்துக்காகச் செய்கிறோம் என்ற மனோபாவம்
வேண்டும்.
அதிதியை
விரட்டித் தான் மாத்திரம் சாப்பிடுவது பாவம்.
ஆண்டவனுக்கும், ஆதிதிக்கும் அளித்த அன்னம்
அமிருத்மாகும்.
எதுவானாலும்,என் போகத்துக்காகச் சாப்பிடுகிறேன்
என்ற எண்ணம்
வரக்கூடாது. பரோபகார சிந்தனையுடன்,பகவான்
கொடுக்கிறான் என்ற
புத்தியுடன் தானம் செய்தால் லக்ஷ்மி கூடவே சதா
இருப்பாள்.
எச்சிற்கையால் கூடக் காக்காய் ஒட்ட மனமில்லாத
துர்ப்புத்தியானவனுக்கு
எல்லாரும் சத்ருதான். தான்ம்ளித்து,பின் ,தான்
உண்பவனுக்கு எந்த
சத்ருவும் மித்திரனாவான்.
ப்ராண அக்னிஹோத்ரம் செய்து சாப்பிடுவது நல்லது.
இப்படிச்
செய்தால்,சாப்பிடுபவன் நான் தான், என்ற பாவம்
விலகி அந்நிலையில்
சை தன்ய ஸ்வரூபத்தை உணர முடியும். உண்பவருக்கு
உயரிய
நன்மை கிட்டும்.
நமக்குச்
சேவை செய்பவர்களுக்கும் திருப்தியாக அன்னம் அளிக்க வேண்டும்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.