தேடல்
மறவுரி தரித்து கமண்டல் ஏந்தி
அடர்ந்த காட்டினுள் தேடினான் – அதை
கண்டான்! இல்லை!
சிற்றின்பங்கள் புடை சூழ்ந்த பலகோடி
மனிதர்கள் வாழும் நாட்டிலும் தேடினான் –அதை
பெற்றான் இல்லை!
எங்கே எங்கே என ஏங்கியது உள்ளம் -அதை
நினது தாயின் கருவறைக்குள் பெற்றாய்
என் உரைத்தது சிந்தை
சிந்தையிடம் “அத்தகைய நிம்மதி மீண்டும்
எங்கே காண்பேன் என வனவினே
நிம்மதி நிம்மதி என் கூறி எள்ளி நகைத்தது சிந்தை
அச்சிரிப்பில் சிந்தையது சூட்சகமாக
உரைத்த-பதில்.......... பதில் ............
சிறு நொடி
பொழுதில்
என் கண்கள் அகல விரிந்து மலர்ந்தது முகம் !
நிம்மதி, நீ மதியால் நினது மனம்தனை
வென்றால் கிடைக்கும்டா பேரின்ப பெருநிம்மதி
இதுவே அதன் தாரக மந்திரம்.
ஆக்கம்
திரு கிருஷ்ணவேணி உதயகுமார்


No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.