Contributors

Friday, 25 January 2013

"நாளை நமதே"

"நாளை  நமதே"
பொன்விழா கண்ட பெருமிதத்துடன்
நம் நாட்டின் மணிக்கொடி
நல்லோர் வாழ்த்துரையில்
நிமிர்ந்து பறப்பதைபாரீர்!
தரணியில் இவ்வன்னை பூமிக்கு
தொண்டாற்றிய தன்னலமற்ற
தியாகிகளையும் போற்றுதற்குறிய
பெருந்தலைவர்களையும் இந்நாளில்
நாம் நினைவுகூர்ந்து அவர் தம்
பெற்று தந்த சுதந்திரத்தை பேணிகாத்து
புதியதோர் பாரதம் படைக்க புறப்பட்டு வாரீர்!
வருங்கால மன்னர்களே, சிங்கங்களே,
நம் நாடு பலதுறையில் வளம் பல சிறக்க
துணிவும் துடிப்பும் நுண்ணறிவும் உள்ள
இளைய தலைமுறையினரே! இன்முகத்துடன்
எழ்ச்சி மிகு பாரதம் படைத்திடவாரீர்!
நாம் அனைவரும் ஒன்று கூடி
வலிமை மிகு இந்தியாவை உருவாக்கிடுவோம்
நல்லறம் செழிக்கக் பல் துறைகளில் நாம்
சிறந்து விளங்கிட மாற்றங்கள் பல கண்டு
ஏற்ற மிகு இந்தியாவின் புகழ் வானளாவி நிற்க
இந்நன்நாளில்  நமது பாரதம் வலிமை மிகு
வல்லரசாகிட விரைந்து செயலாற்றி
வெற்றி காணுவோம் வாரீர் !
வாழ்க் பாரதம்வாழ்க் வையகம் !
வாழ்க மணித்திரு நாடு!
வந்தே மாதரம்!  வந்தே மாதரம்!   
ஆக்கம்: கிருஷ்ணவேணி உதயகுமார்

வெற்றி திருவிழா


வெற்றி திருவிழா                                

திருவிழா இன்பத் திருவிழா –வீறு  

கொண்ட சிங்கங்கள் வெகுண்டு எழுந்து

தாய் நாட்டின் மானம் காக்க –அல்லும்

பகலும் அயராது உழைத்து –பாரத

தாயின் அடிமைச் சங்கிலியை அகற்றி

வெள்ளையனே வெளியேறு என விரட்டி

வெற்றிகொடி நாட்டிய வெற்றி திருவிழா

வீர மக்களை ஈன்ற வீரத்தாயாம்

அன்னை பூமிக்கு வெற்றிகளிப்புடன்

வாழ்த்துகூறும் பெருமை மிக்க பெருவிழா

வாழ்க பாரதம் வாழ்க மணித்திருநாடு

வந்தே மாதரம் வந்தே மாதரம் –என்

வாழ்த்திமகிழும் வெற்றிவிழா எங்கள் வெற்றிவிழா

ஆக்கம் கிருஷ்ணவேணி உதயகுமார்

Monday, 14 January 2013

சொல் அமுது

செந்தமிழ் சொல்லாலே சிவஞானப்ழமான
செந்தில்நாதனின் சிறப்பினை செப்பிட
மூலகணபதி முன்நின்றருள்வாய்,
வந்தெனை ஆட்கொண்ட கந்தனே
வண்ண மயில்மீதமர்ந்த சிவ பாலனே போற்றி போற்றி!
வேலை வந்திப்பவர்க்கெந்த  நாளுமே
வாராது துயர் வெற்றி தின்னமே வேலவா போற்றி போற்றி !
ஞானவேல் கையில்கொண்ட ஞானவேலனே
ஞாலத்தை  காக்கும்  சிவகாமி பாலனே போற்றி போற்றி!
ஞானியர் போற்றிடும் ஞானசீலனே
ஞானகுருவாய் வந்து நின்ற் சுவாமி நாதனே போற்றி போற்றி!
தீந்த்மிழ்க்கு சுவை சேர்த்த் முத்தமிழ் வேந்தனே
திருபரங்குன்றம் அரும் சுப்ரமண்யனே போற்றி போற்றி!
தித்திக்கும் திருப்புகழ்தந்த தேவனே
திணை புனை வள்ளி மணாளனே போற்றி பொறி!
சித்தர்கள் போற்றிடும் பழனிநாதனே
சிக்கல் சிங்கார வடி வேலனே போற்றி போற்றி!
சிந்தையில் வைத்தேன் உந்தனை குகனே
சீர் மிகு வாழ்வெனக்கு  தந்தனை குமரனே போற்றி போற்றி!
மூவிரு முகங்கள் கொண்ட முருனே
முன்நின்று காத்திடும் முதல்வனே போற்றி போற்றி!
முவுலகமும் போற்றும் முக்கண்ணன் மைந்தனே
முக்தியை நல்கிடும் முத்துகுமரனே போற்றி போற்றி!
பழனியில் அமர் பாலமுருகனே
மைந்தமிழ் பாவலரின் பாட்டுடைத் தலைவனே போற்றி போற்றி!
படைவீடு கொண்ட பன்னிருகையனே
பழமுதிர் சோலை அருள் சரவணபவனே போற்றி போற்றி!
அன்பர்களை ஆட்கொள்ளும் ஜங்கரன் சோதரனே
ஆண்டிகோலம் பூண்ட கிரிகுகனே போற்றி போற்றி!
அவ்வைக்கருளிய சோலைமலையனே
அறுபடை வீடமர்ந்து அருள் தனைவழங்கிடும் அருள்வள்ளளே போற்றி போற்றி !
ஆக்கம்:கிருஷ்ணவேணி உதயகுமார்

ஆட்கொல்லி அருவம்



உருவமிலாதது உள்ளத்தில் உட்புகுந்ததிட்டால்-மனித
உயிரையும் பறிக்கும் வல்லமை கொண்டது,
அகண்ட காணக்த்தேயுள்ள அரும்பெருஞ் செல்வங்கள்
அக்னி குஞ்சகமர்ந்தாள் அழிவது தின்னமே!
சந்தேகத்தீ சாதி மதபேதம் பார்பதில்லை
சாத்திரம் கற்ற பண்டிதராயினும் பாமரராயினும்
பொன் மனமென்னும் கோயிலில் பெற்ற பெரும் செல்வங்கள்
பெரும் சந்தேக்த்தீயில் சிக்கி சீரழிவது தின்னமே!
ஆத்தீக்காட்பட்டோர் உற்றார் உடனபிறந்தாரையும்
ஆரூயிர் தோழனையும் தம் மனைவி மக்களையும் விடுவதில்லை
அச்சந்தேக ப்பெருந்தீயீல்  தான் அழிவது மட்டுமின்றி
அவனில் சகலத்தையும் இழப்பது தின்னமே!
மாசற்ற மனம் பெற மாசில்லா மகேசன் புகழை
முக்காலமும் ஒதுவோர்க்கு  எக்காலமும் துயரில்லை
தேனினும் இனிய திருவாசகம் தன்னை நாவினால்
தினம் இசைப்போர்க்கு எழ்பிறப்பிலும் எத்தீயும் அனுகாது தின்னமே!
                                                                             
ஆக்கம்:கிருஷ்ணவேணி உதயகுமார்