சிக்கி தவிக்குதம்மா
என் சிந்தை
சீக்கிரம் சிறை மீட்க
வந்திடம்மா -ஆதிசக்தி
பதிபக்தி
பெருக்கினால் புலம்பும்
பிள்ளை என்னன
பாராமுகம் ஏனோ -பராசக்தி
அருட்பெரும் சக்தியே
ஆனந்தவள்ளியே -மகாசக்தி
சேயின் கூக்குரல்
நினது
செவிகளில்
சேரலையோ -சிவசக்தி
விரைந்தேன் முன்னே
வந்தால் என்
வேதனை தீருமிம்மா -வீரசக்தி
ஆயிரம் நாமங்கள்
நினகுண்டு
அம்மா என்ற
அமுதமொழி கூறி
அழைத்திட்டேன் அவள்
அகமகிழ –ஓம்சக்தி
ஒடி என் முன்னே
வந்திட்டாள்
ஒப்புயர்வான வாழ்வு
நல்கிடவே -ஜயசக்தி
கவலை இனி எனக்கில்லை
கறபகவல்லி
துணையிருக்க -நவசக்தி
ஆக்கம்
திரு கிருஷ்ணவேணி உதயகுமார்
.jpg)

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.