அந்த நாட்களில் நம் மக்கள் ஸ்நானம் செய்தவுடன்
நெற்றியில் விபூதி,
திருமண் போன்ற தெய்வச் சின்னங்களைத்
தவறாமல்இட்டு வந்தார்கள்
இவற்றின் தத்துவம் என்ன?
“ஏ பக்தா! நீ மண்ணிலிருந்து வந்தவன். உன் உடல் ஒரு மன்
பாண்டம் என்றாவது ஒரு நாள் நீ மண்ணிற்குத் திரும்புவது திண்ணம்.
எனவே திருமண், விபூதி இவற்றைக் குழைக்கும் ஸமயம் உன் அநித்யத்துவமும் நானும்
ஞாபகம் வரட்டும்.கூடியவரை, பிறர்க்கு
உபகாரம் செய். ஸ்வய நலத்தைக் குறைத்துக் கொள்”
என்று இவைகளின் மூலம் பகவான் நமக்குக்
கூறுகிறார் போலும்!
தவிர, எவன் ஒருவனுடைய
நெற்றியில் இந்தத் தெய்விகச் சின்னம்
எப்பொழுதும் இருக்கிறதோ,
எவன் வீட்டு முன் வாயிலில் இந்தச்
சின்னங்கள் பொறிக்கப்பட்டு
இருக்கின்றனவோ, அம்ம்னிதனுக்கும்
அந்த வீட்டிற்கும் கடவுள்
அருள் பரிபூரணமாக இருக்கும் என்று நம்பி,
நம் முன்னேரகள் ஆனந்தமாக
வாழ்ந்து வந்தார்கள் அக்காலத்தில்.
இன்று நெற்றிக்கு இடுவதை
அவமானமாகக் கருதலானேம்..
அந்நாட்களில் வைஷ்ணவர்
வீட்டு வாசல்களில் திருமண்,சங்கு
சக்கரத்துடன் கூடிய
சின்னங்கள் பொறித்து வைக்கப்பட்டிருப்பது
வழக்கம்.இப்போது அவர்கள்
கட்டும் வீடுகளிலும் இதை மறந்து
விட்டனர்.
“ நீரில்லா நெற்றி பாழ் : நெய்யில்லா உண்டி பாழ் “
என்பது ஒளவைப் பிராட்டியின்
அருள் வாக்கன்றோ! ஆதலின் நாமும் நீராடியவுடன் நெற்றியில் விபூதி, திருமண்,கோபி
சந்தனம் போன்ற் சின்னங்களைத் தவறாமல் அணிவதுடன் நாம் வசிக்கும் வீடுகளிலும்
இத்தகைய சின்னங்களை முன்வாயிலில்
பொறித்து வைக்கவேண்டும்.
பல பிறவிகளில் செய்த புண்ணியப் பயனாய்ப் பெற்ற
அரிய
இம்மனித உடல்
அழியக்கூடியதாதலின் அழியா இன்பத்தையடைய
ஒவ்வொருவரும் பாடுபட்டு
உய்ய வேண்டும் என அறிவிப்பதே
இச்சின்னம் என்பது நம்
முன்னேர் நம்பிக்கை.
“ முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் முடிவிலொரு
பிடிசாம் பராய்வெந்து மண்ணாவ தும்கண்டு மேலுமிந்தப்
ப்டிசார்ந்த வாழ்வை நினைப்பதல்லால் பொன்னி னம்பலவன்
அடிசார்ந்து நாமுய்ய வேண்டுமென் றேயறி வாரில்லையே
என்ற பட்டினத்தார் பாடலும் இக்கருத்தை
வலியுறுத்தும்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.