Contributors

Saturday, 13 October 2012

சரணாகதி



சிக்கி தவிக்குதம்மா என் சிந்தை
சீக்கிரம் சிறை மீட்க வந்திடம்மா   -ஆதிசக்தி
பதிபக்தி பெருக்கினால் புலம்பும்
பிள்ளை என்னன பாராமுகம் ஏனோ  -பராசக்தி
ஆலவாயனின் அக மர்ந்துள்ள
அருட்பெரும் சக்தியே ஆனந்தவள்ளியே  -மகாசக்தி
சேயின் கூக்குரல் நினது
செவிகளில் சேரலையோ        -சிவசக்தி
விரைந்தேன் முன்னே வந்தால் என்
 வேதனை தீருமிம்மா      -வீரசக்தி
ஆயிரம் நாமங்கள் நினகுண்டு
அடியார்கள் நின்னை அழைத்திடவே  -அருட்சக்தி
அம்மா என்ற அமுதமொழி  கூறி
அழைத்திட்டேன் அவள் அகமகிழ –ஓம்சக்தி
ஒடி என் முன்னே வந்திட்டாள்
ஒப்புயர்வான வாழ்வு நல்கிடவே  -ஜயசக்தி
கவலை இனி எனக்கில்லை
கறபகவல்லி துணையிருக்க -நவசக்தி

ஆக்கம் திரு கிருஷ்ணவேணி உதயகுமார்

பிறவி பயன்



சித்தம் கலங்குதம்மா சீர்செய்ய
விரைந்து நீ வருவாயம்மா
பந்த பாசத்தாலே மனசு
மாட்டி தவிக்குதம்மா
வாழ்க்கை கடலினிலே
வழியரியா படகானேன்
களங்கரை விளக்கமாக் என்னை
கரை சேர்க்க கரம் தாயம்மா
அம்மா என்று நான் அழைதத்துமே
அகம்கிழ்நக்ருகினில் நின்றாய்ம்மா
அஞ்சேல்அஞ்சேல் என கூறி எனக்கு
ஆறுதல் இங்கு நீ தந்தாயம்மா
பேரினப்பெருவாழ்வுயாம் பெற்றிடவே
பேரருள் என்மீது புரிந்தாய்ம்மா 
உலகாலும் ஈஸ்வரனின்
உள்ளத்தமர்ந்த உமயவளே
முன்னம் நான் செய்த புண்ணியமே
நின்ன தாயாகயான் இங்கு பெற்றதற்க்கு
பெரிதொன்றும் யான் வேண்டேன் பெம்மானிடம்
தாயவல் நீ என்னுடன் இருக்கையிலே
பிறவிபயனை பெற்றிட்டேன் இனும்ஓர்
பிறவி இனி வேண்டாம்.

ஆக்கம் திரு கிருஷ்ணவேணி உதயகுமார்

Sunday, 7 October 2012

நெற்றிக் குறி இடுதல்



அந்த நாட்களில் நம் மக்கள் ஸ்நானம் செய்தவுடன் நெற்றியில் விபூதி,
திருமண் போன்ற தெய்வச் சின்னங்களைத் தவறாமல்இட்டு வந்தார்கள்
இவற்றின் தத்துவம் என்ன?

“ஏ பக்தா! நீ மண்ணிலிருந்து வந்தவன். உன் உடல் ஒரு மன் பாண்டம் என்றாவது ஒரு நாள் நீ மண்ணிற்குத் திரும்புவது திண்ணம்.
எனவே திருமண், விபூதி இவற்றைக் குழைக்கும் ஸமயம் உன் அநித்யத்துவமும் நானும் ஞாபகம் வரட்டும்.கூடியவரை, பிறர்க்கு
உபகாரம் செய். ஸ்வய நலத்தைக் குறைத்துக் கொள்”

என்று இவைகளின் மூலம் பகவான் நமக்குக் கூறுகிறார் போலும்!
தவிர, எவன் ஒருவனுடைய நெற்றியில் இந்தத் தெய்விகச் சின்னம்
எப்பொழுதும் இருக்கிறதோ, எவன் வீட்டு முன் வாயிலில் இந்தச்
சின்னங்கள் பொறிக்கப்பட்டு இருக்கின்றனவோ, அம்ம்னிதனுக்கும்
அந்த வீட்டிற்கும் கடவுள் அருள் பரிபூரணமாக இருக்கும் என்று நம்பி,
நம் முன்னேரகள் ஆனந்தமாக வாழ்ந்து வந்தார்கள் அக்காலத்தில்.
இன்று நெற்றிக்கு இடுவதை அவமானமாகக் கருதலானேம்..
அந்நாட்களில் வைஷ்ணவர் வீட்டு வாசல்களில் திருமண்,சங்கு
சக்கரத்துடன் கூடிய சின்னங்கள் பொறித்து வைக்கப்பட்டிருப்பது
வழக்கம்.இப்போது அவர்கள் கட்டும் வீடுகளிலும் இதை மறந்து
விட்டனர்.

“ நீரில்லா நெற்றி பாழ் : நெய்யில்லா உண்டி பாழ் “

என்பது ஒளவைப் பிராட்டியின் அருள் வாக்கன்றோ! ஆதலின் நாமும் நீராடியவுடன் நெற்றியில் விபூதி, திருமண்,கோபி சந்தனம் போன்ற் சின்னங்களைத் தவறாமல் அணிவதுடன் நாம் வசிக்கும் வீடுகளிலும்
இத்தகைய சின்னங்களை முன்வாயிலில் பொறித்து வைக்கவேண்டும்.
                  பல பிறவிகளில் செய்த புண்ணியப் பயனாய்ப் பெற்ற அரிய
இம்மனித உடல் அழியக்கூடியதாதலின் அழியா இன்பத்தையடைய
ஒவ்வொருவரும் பாடுபட்டு உய்ய வேண்டும் என அறிவிப்பதே
இச்சின்னம் என்பது நம் முன்னேர் நம்பிக்கை.

“ முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் முடிவிலொரு
பிடிசாம் பராய்வெந்து மண்ணாவ தும்கண்டு மேலுமிந்தப்
ப்டிசார்ந்த வாழ்வை நினைப்பதல்லால் பொன்னி னம்பலவன்
அடிசார்ந்து நாமுய்ய வேண்டுமென் றேயறி வாரில்லையே

என்ற பட்டினத்தார் பாடலும் இக்கருத்தை வலியுறுத்தும்.

2. உலகம் உய்ய ஒரு பெருவழி பக்தியே


ஆண்டவனுக்கு அர்ப்பணிக்காம்ல் உண்பது
திருடுவது போன்றது.
உணவின் தூய்மை குறித்து
ஸ்ரீ சிருங்கேரி ஆசார்யாள் பொன்னுரை
உலகில் சாப்பிடாம்லிருப்பது முடிய்டாது. சரீரம் நிலைப்பதற்காக எப்படிச் சாப்பிடுவதென்பதைத் தெரிந்துகொள்வதுடன் எவை அருந்தத் தக்கவை, எவ்விதமாகச் சாப்பிட் வேண்டும்மென்பதையும் புரிந்துகொள்ளுதல் நலம். பகவத்பாதாள் ஸ்தஸ்லோகியில்,இதனைக் குறித்து விவரித்துள்ளார்கள்.
முதலாவதாக,கண்ட சாமான்களை கண்ட இடத்தில் சாப்பிடக்கூடாது,
உண்ணும வகை குறித்து நம் சாஸ்திரங்கள் எம்முறை கைப்பற்ற வேண்டும என்பதைத் தெளிவாக்குகின்ற்ன.
உலகம் தானாக ஏற்படவில்லை என்பது ஆஸ்திகக் கருத்து.அது ஒரு
காரிய காரணமாகவே ஏற்பட்டது. லோகநாயகன் இதனைச் சிருஷ்டித்து
மக்களுக்குப் பஞ்ச இந்திரியங்களையும் ஆத்மாவையும் கொடுத்தார் சுகவாழ்விற்கு வேண்டிய ஏற்பாடுகளையும் செய்தார் இதனை உணராது
பகவான் ஞாபகமே இராது வாழ்தல் தவறு.
ஆண்கள் கட்டலாம்,கால்வாய்கள் வெட்டலாம், பருவ மழையில்லையெனில் யாது பயன்? லோகநாயகன் சகாயமின்றி ஒன்றும் செய்யமுடியாது.
இதை உணர்ந்து மக்கள் ஒருவருக்கொருவர் ஒத்தாசை செய்து உணவு சம்பாதித்து எல்லோரும் சன்தோஷ்மாகச் சாப்பிடவேண்டும். எகாங்கியாய் வாழ்வதில் சுகம் கிடையாது. சற்றுச் சிந்தித்துப் பார்த்தால், நீ, மற்றேருவருக்காகவே ஆகாரம் தேடுகிறய் என்பது புலனாகும்.வீட்டில் உள்ள குழந்தைகளும் மற்றவர்களும் சுகமாயிருந்தால். தானும் சுகவாழ்வு வாழ முடியும் என்ற எண்ணம் இருக்கிறது. ஏகாங்கியாயிருந்தால் சுகமாய் வாழ முடியாது.
இஷ்ட காம்யங்களை நமக்குக் கொடுக்கக் சித்தமாயிருக்கும்
பகவான் அளித்த வஸ்துக்களை, அவருக்கு முதலில் நிவேதனமாக
அளிக்காது சாப்பிடுபவர் திருடனுக்குச் சமானமாவர். ஆண்டவனுக்கு அர்ப்பித்துச் சாப்பிட் வேண்டும்.தேவதை அதிதிக்ளுக் அளித்த பிறகு,
மிச்சத்தைச் சாப்பிட்டால் சர்வ பாவங்களும் அகலும்.அப்படிச் செய்யாதவன் அறிவில்லாதவன், அவன் சாப்பிடட் அன்னம் வியர்த்தம். அவன் மிருத்யுவை உள்ளே காப்பாற்றி வருகிறன். வத்ததெல்லாம் தனக்குப் போதாது என்று எண்ணுகிறான். இவனுக்குப் பாபம் துர்ப்புத்தி அதிகமாகும். உணவு தயாரிக்க ஆரம்பித்து அடுப்பில் வைக்கும்போதே தேவதா விநியோகத்துக்காகச் செய்கிறோம் என்ற மனோபாவம் வேண்டும்.
     அதிதியை விரட்டித் தான் மாத்திரம் சாப்பிடுவது பாவம்.
ஆண்டவனுக்கும், ஆதிதிக்கும் அளித்த அன்னம் அமிருத்மாகும்.
எதுவானாலும்,என் போகத்துக்காகச் சாப்பிடுகிறேன் என்ற எண்ணம்
வரக்கூடாது. பரோபகார சிந்தனையுடன்,பகவான் கொடுக்கிறான் என்ற
புத்தியுடன் தானம் செய்தால் லக்ஷ்மி கூடவே சதா இருப்பாள்.
எச்சிற்கையால் கூடக் காக்காய் ஒட்ட மனமில்லாத துர்ப்புத்தியானவனுக்கு எல்லாரும் சத்ருதான். தான்ம்ளித்து, பின், தான் உண்பவனுக்கு எந்த சத்ருவும் மித்திரனாவான்.
     ப்ராண  அக்னிஹோத்ரம் செய்து சாப்பிடுவது நல்லது. இப்படிச்
செய்தால், சாப்பிடுபவன் நான் தான், என்ற பாவம் விலகி அந்நிலையில்
சை தன்ய ஸ்வரூபத்தை உணர முடியும். உண்பவருக்கு உயரிய
நன்மை கிட்டும். நமக்குச் சேவை செய்பவர்களுக்கும் திருப்தியாக அன்னம் அளிக்க வேண்டும்.

1. உலகம் உய்ய ஒரு பெருவழி பக்தியே


உலகத்தை உய்விக்கவே சூரியன் நாளும் வான்விதியில் வலமாக
உலவிவருகிருன். மரங்களும் நதிகளும் கனிகளையும் நன்னிரையும்
கைம்மாறு கருதாது பிறருக்கே உதவுகின்றன.இவ்வாறு தன்னலம்
கருதாது பிறர்நலம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு பணி புரியும்
சான்றேர் உலகத்தில் உள்ள்மையாலேயே உலகம் நிலைத்துள்ளது.
ஆயினும் இன்று நாம் காண்பதென்ன? எங்கும் பஞ்சமும் நோயும்
பசியும் வருமையுமே அல்லவா? இராமனும்,கண்ணபிரானும்,புத்தரும்
மகாவீரரும், இயேசுநாதரும்,முகம்மது நபியும், வள்ளுவரும் வான்மிகியும் ஆழ்வாரும்,நாயன்மார்களும் மற்றும் பல மதாசாமியார்களும் அவதேரித்த
இவ்வுலகில் இத்தகைய கொடுமைகள்? இவற்றிக்கு காரணம் தான் என்ன?
மக்கள் உள்க்வாழ்க்கைக்கு வேண்டியவைகளையே கற்றுஉண்டு உடுத்து,
உயிர் வாழ மட்டும் விரும்பியே இத்தகைய துன்பத்திற்கு காரணமாகும், நாடு இனம், மொழி, நிறம், சாதி, சமயம் பற்றிய மாறுபாடுகளும்,தன்னலம் முதலிய தீய நினைவுகளும் கொண்டுள்ளமையாலேயே இத்தீமைகள் இன்று தோன்றியுள்ளன. இவற்றைப் போக்கி அனைவரையும் நன்மார்க்கத்தில் செலுத்த வல்லது யாது? அதுதான் அங்கிங்ம் அனாதபடி எங்கும் தங்கியிருக்கும் இறைவனிடம் இடைவிடாது பக்தி கொள்ளுதல். இந்த பக்தி மார்க்கத்திற்கு  நாம எஜ்னம் அவசியம் இந்த நாம பஜனத்திற்கு பரம்பொருளின் வைபவங்களைக் காட்டக்கூடிய ஸ்தோத்திரகள் அவசியம். எனவே புராதனமான ஸ்தோத்திரங்களிலிருந்து முக்கியமானவைகளைத் தேர்ந்தெடுத்து, தமிழ் எழுத்துக்களில் இங்கு அச்சிட்டிருக்கிறோம். இந்த ஸ்தோத்திரங்களை நித்யப்படி பூஜைகளிலும், பண்டிகை தினங்களிலும், கோயில்களிலும் பாராயணம் செய்வதால் ஆஸ்திகர்கள் இந்த ஜன்மத்தில் பரம் ஸெளக்யத்தை அடைவார்கள் என்பது திண்ணம்.