Contributors

Saturday, 16 May 2020

பல்வேறு அதிசயங்கள் நிறைந்த சிவ ஆலயங்களைப் பார்த்திருப்போம். அப்படிப்பட்ட அதிசயமும்,
சிறப்பம்சமும் வாய்ந்த ஆலயமாக புதுக்கோட்டையில் வேப்பம்பட்டி அமைந்துள்ள நெய் நந்தீஸ்வரர்
ஆலயம் விளங்குகிறது. இந்த நந்தியின் கதை மற்றும் அதன் நெய் அபிஷேக அதிசயம் குறித்து விரிவாக பார்ப்போம்...
பல்வேறு அதிசயங்கள் நிறைந்த சிவ ஆலயங்களைப் பார்த்திருப்போம். அப்படிப்பட்ட அதிசயமும்,
 சிறப்பம்சமும் வாய்ந்த ஆலயமாக புதுக்கோட்டையில் வேப்பம்பட்டி அமைந்துள்ள நெய் நந்தீஸ்வரர் ஆலயம் விளங்குகிறது.
இந்த நந்தியின் கதை மற்றும் அதன் நெய் அபிஷேக அதிசயம் குறித்து விரிவாக பார்ப்போம்...

நெய் நந்தீஸ்வரர் ​கோயில் விபரம்
கோயில் விபரம்

மூலவர்:சொக்கலிங்கேஸ்வரர் சுவாமி

அம்மன் - மீனாட்சி அம்மன்

தல விருட்சமாக வன்னி மரம் உள்ளது.

இந்த கோயில் புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன் பட்டியில் அமைந்துள்ளது.


நெய் நந்தீஸ்வரர்:

தஞ்சாவூரில் மிகப்பெரிதாக நந்தி அமைந்து பக்தர்களை கவர்ந்தது போல, இங்குள்ள நெய் நந்தியும் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

கோயிஒ அமைந்துள்ள வேப்பம்பட்டியில் ஒரு சிவ பக்தர் சிவ லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்தார். ஆனால் நந்தீஸ்வரரை பிரதிஷ்டை செய்யாமல் விட்டுவிட்டார்.

நந்தியின் புனிதம் கருதி அதை தீர்த்த குளத்திற்குள் வைத்து விட்டார். ஒருநாள் அவருக்கு கடுமையான வயிறு வலி ஏற்பட்டது. அப்போது
மானசீகமாக சிவனை வேண்டிக்கொண்டார். தொடர்ந்து அவரின் கனவில் மாடுகள் விரட்டுவது போல காட்சிகள் கண்டு திடுக்கிட்டார்.

உடனே நந்தியை பிரதிஷ்டை செய்வதாகவும், அதற்கு நெய் அபிஷேகம் செய்வதாகவும் வேண்டிக்கொண்டார்.
 இந்த நிகழ்வு நடந்த சில நாட்களிலேயே அந்த பக்தரின் உடல் பிணி தீர்ந்தது. அவர் நெய் அபிஷேகம் செய்து வழிபட்டது போல பலரும்
 நெய் அபிஷேகம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது.

பூலாநந்தீஸ்வரர் ஆலயம்: உயரத்தில் மாறி மாறி காட்சி தரும் அதிசய சிவ லிங்கம்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.