Contributors

Friday, 22 May 2020

செவ்வாய் தோஷம்: அந்த விசயத்தில ஒத்துப்போகலையா? தோஷம் இருக்கா பாருங்க பரிகாரம் பண்ணலாம்
 மதுரை: செவ்வாய் பகவான் தாம்பத்ய உறவுக்கு உரிய கிரகமாகவும் செவ்வாய் பார்க்கப்படுகிறது.
எனவே ஒருவரது உடலில் காமத்தின் தன்மையை நிர்ணயிக்கக் கூடியதும் செவ்வாய்தான்.
தாம்பத்தியத்தில் ஒருத்தருக்கு திருப்தி கிடைத்து மற்றவருக்கு திருப்தி கிடைக்காமல் போனால்,
ஏமாற்றமடைந்தவர் மற்றொரு துணையைத் தேடுவது போன்ற சிக்கல் ஏற்படும். தாம்பத்ய வாழ்க்கையில் முரண்பாடுகள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்
செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணிற்கு, செவ்வாய் தோஷம் உள்ள ஆணை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
 செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்திற்கு, செவ்வாய் தோஷம் இல்லாத ஒருவரை திருமணம் செய்யும் போது தாம்பத்ய வாழ்க்கையில் அதிகளவு ஏற்படுகிறது.
இதைத் தவிர்க்கவே செவ்வாய் தோஷம் உள்ளவர்களை, செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
 சில விதிவிலக்குகளும் உண்டு. இதேபோல் ரத்தத்தில் ஆர்.எச் பேக்டர் என்ற தன்மையும் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு ஒரு மாதிரியாகவும்,
அந்த தோஷம் இல்லாதவர்களுக்கு வேறு மாதிரியாகவும் இருக்கும். இதனால் தோஷம் உள்ளவர்களுக்கு தோஷம் இல்லாதவரை திருமணம் செய்து வைப்பதால்
குழந்தை பாக்கியத்திலும் பிரச்சனை ஏற்படும். ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கும் பெண்களுக்கு திருமண தடைபடும் என்று ஜோதிடர்கள் கூறுவதுண்டு.
செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாடை அணிந்து, தட்டாங்குளம் காளியை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி திருமணம் நடைபெறும்,
குழந்தைப்பேறு கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. செவ்வாய் பகவான் புராண கதை முன்னொரு காலத்தில் அந்தகாசுரன் என்ற அரக்கன்,
சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருந்தான். அவன் தவம் இருந்த இடம் உஜ்ஜைனி. அவனது தவத்தை கண்டு மகிழ்ந்த பரமேசுவரன் தோன்றினார்.
ஈசனை தரிசித்த அந்தகாசுரன், இறைவா! உமது தரிசனம் கண்டு எல்லையில்லா ஆனந்தம் அடைந்தேன். எனது ரத்தம் தரையில் விழுந்தால்
அதில் இருந்து என்னைப்போல நூற்றுக்கணக்கானவர்கள் பிறக்க வேண்டும். எனது உள்ளம் மகிழும்படியாக இந்த வரத்தை எனக்கு வழங்கி அருளவேண்டும் என்று வேண்டினான்.
 அசுரனுக்கு வரம் பக்தர்கள் வேண்டியதை வாரி வழங்குவதே இறைவனின் முதல் கடமை என்பதால், அசுரன் கேட்ட வரத்தை அப்படியே வழங்கினார் சிவபெருமான்.
வரம் பெற்ற அரக்கனுக்கு ஆணவம் தலை தூக்கியது. மமதையில் தன் நிலை மறந்து உஜ்ஜைனி நகரில் இருந்த முனிவர்கள், ரிஷிகள், மக்கள் என பேதம் பார்க்காமல்,
 அனைவருக்கும் துன்பம் விளைவித்தான். அவனது செய்கையால் நிலைகுலைந்து போன முனிவர்கள், சிவபெருமானை நோக்கி வழிபாடு நடத்தினர்.
 பக்தர்களின் துயர் களைய பரமேஸ்வரன் முன் வந்தார். அதன்படி அந்தகாசுரனுடன் போரிட முடிவுசெய்தார்.
செவ்வாய் அவதாரம் ஒருநாள் இரவு அவர் சூலாயுதத்துடன் அந்தகாசுரன் முன் தோன்றினார். வந்திருப்பது பரம்பொருள் என்று அறியாத அசுரன்,
சிவனை எதிர்த்துத் தாக்கினான். இரு வருக்கும் இடையே வானத்தில் கடுமையான போர் நடந்தது.
இந்த யுத்தம் பல ஆண்டுகள் நீடித்தது. போர் முடிவடையும் நேரத்தில் சிவபெருமானின் உடலில் இருந்து வியர்வையின் சொட்டுகள் நிலத்தில் விழுந்தன.
 அது நிலத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்து, செவ்வாய் கிரகம் பிறந்தது.
அரக்கன் அந்தகாசுரனின் உடலில் இருந்து விழுந்த ரத்தத் துளிகளை செவ்வாய் கிரகம் உள்வாங்கி அதை பூமியில் விழாமல் தடுத்தது.
இதைத் தொடர்ந்து சிவபெருமான் அந்தகாசுரனை சூலாயுதத்தால் அழித்தார். தேவர்களும், முனிவர்களும் ஆனந்தம் அடைந்தனர்.
 இந்த வரலாறு கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. அங்காரகன் அரக்கனின் ரத்தத்தை செவ்வாய்க்கிரகம் உள்வாங்கி கொண்டதால் அது சிவப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.
சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து, பூமியில் விழுந்த ஒரு துளியே செவ்வாய் ஆகும்
. பூமாதேவியினால் வளர்க்கப்பட்டவன் செவ்வாய் (தரணீ கர்ப்ப சம் பூதம்) என விளக்குகிறார் ஸ்ரீ வியாச பகவான். பரத்வாஜ முனிவரின் கருணையினால்,
அவரது மகனாக வளர்ந்து, நவக்கிரகங்களில், அக்கினிக்குச் சமமான ஒளியும், பலமும், வீர்யமும் பெற்று, ஒளி வீசிப் பிரகாசிக்கும் இவன் அங்காரகன் என்று புகழ் பெற்றான்.
செந்நிறத்தில்,
 கொழுத்து விட்டுப் பிரகாசிக்கும் நெருப்பைப் போல் ஜொலிப்பதால், செவ்வாய் என்று பெயரை அடைந்தான். கிரேக்க பாசையில் மார்ஸ் எனப் போற்றப்பட்ட இக்கிரகம்
நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்தபடியாக பராக்கிரமம் மிக்க செயல் ஆற்றல் உள்ள கிரகம் செவ்வாய். ஆற்றல், ஆதிக்கம் பராக்கிரமம், வீரதீர செயல்கள்,
அதிகாரம் செலுத்துதல், ஆளுமைத்திறன், நம்பிக்கை, வளைந்து கொடுக்காத தன்மை, தர்மம், நேர்மை, நியாயம்,
 ஆண்மை போன்ற எண்ணிலடங்கா தன்மைகள் கொண்ட கிரகம்.
செவ்வாய் தோஷம் ஜாதகங்களில் லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் என்கிறோம்.
 இதற்கேற்ப 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும்
ஜாதகங்கள் இரண்டை சேர்ப்பதன் மூலம், தோஷம் சமன் அடைகிறது. பெரும்பா லான ஜாதகங்களில்
 அதாவது 90 சதவிதத்திற்கு மேல் செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகி இருக்கும்.
 தோஷம் நிவர்த்தியாகி விட்டது என்பதற்காக செவ் வாய் தோஷம் அறவே இல்லாத ஜாதகங்களை சேர்க்கக்கூடாது.
 உதாரணமாக ஒருவரது ஜாதகத்தில்
 லக்னத்திற்கு நான்காம் இடத்தில் செவ்வாய் இருந்து தோஷ நிவர்த்தி ஆகி இருந்தால், அதே போல் 2, 4, 7, 8, 12ல் உள்ள ஜாதகத்தைத்தான்
சேர்க்க வேண்டும்.
1, 3, 5, 6, 9, 11ல் செவ்வாய் உள்ள ஜாதகத்துடன் சேர்க்க கூடாது. தோஷ நிவர்த்தி செவ்வாயை குரு பார்த்தாலும் தோசம் இல்லை என்ற கருத்தும்,குளிர்ச்சியான கிரகம் என்றதால் ஏற்பட்டது
 ரிஷபம்,கன்னி என்ற இரண்டு ராசிகளும் நீர் தன்மை உடையது இந்த வீடுகளில் செவ்வாய் இருந்தாலும் தோஷம் நிவர்த்தி ஆகிறது. மகரமும் நீர் ராசி என்பதால்,செவ்வாய் தோஷம்
 நிவர்த்தி ஆகிறது. மேஷம் ,விருச்சிகம் ராசியில் பிறந்தவர்களுக்கு தோஷம் இல்லை, காரணம் லக்னாதிபதியாக வரும் கிரகம் சாதகருக்கு நன்மைதான் செய்வார் என்பதால் தோஷம்
 இல்லை. மேலும் சூரியன்-சந்திரன் இரண்டும்,செவ்வாய் இருக்கும் இடத்தை பார்த்தால் தோஷம் இல்லை காரணம் சூரியனும் சந்திரனும் அம்மை அப்பனாக கருதப்படுகின்றனர்.
 செவ்வாய் தோஷ பரிகாரம் குரு,சுக்கிரன்,புதன் இவர்களால் நீக்க இயலாத தோசத்தையும் சூரியன் -சந்திரன் இவர்களால் நீக்க முடியும் எனவே செவ்வாய்,சூரியன் -சந்திரன் பார்வை
பெறுவது தோச நிவர்த்தி ஆகிறது. இதுபோன்று செவ்வாய் தோஷ அமைப்பை ஆய்வு செய்து ஆராய்ந்து பலன் கூற வேண்டும். தோஷம் இருப்பவர்கள் செவ்வாய்க்குரிய அதிதேவதையான
 முருகனை வழிபடுவது கோதுமை ரொட்டி, வெள்ளை எள் கலந்த இனிப்பு பலகாரங்கள், துவரை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் கொடுப்பது நல்லது. செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து செவ்வாய்
பகவானுக்கு விளக்கேற்றுவது, சஷ்டி விரதம், கிருத்திகை விரதம் மேற் கொள்வது, தினமும் கந்தசஷ்டி கவசம் படிப்பதுநல்லது. தேவிப்பட்டணம் செவ்வாடைக்காரி ராஜபாளையத்திலிருந்து தென்காசி
செல்லும் பாதையில் தேவிப்பட்டணம் இருக்கிறது. மகிசாசுரனை வதைத்த இடம் என்பதால் இதற்கு தேவி பட்டணம் என்ற பெயர் ஏற்பட்டது. இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் புகழ்பெற்ற
தட்டாங்குளம் காளியம்மன் கோயில் இருக்கிறது. இந்த காளியம்மன் செவ்வாடைக்காரி என்னும் சிறப்பு பெற்றவள். கேட்டவருக்கு கேட்ட வரம் தரும் அன்னையாக காளியம்மன் இங்கு அருள்
 பாலிக்கிறாள். திருமணதடை பட்டவர்கள் செவ்வாய் கிழமையில் இங்கு வந்து செவ்வாடை உடுத்தி தட்டாங்குளத்தில் குளிக்க வேண்டும். ஈரத்துணியுடன் கோவிலை 9 முறை சுற்றிவர வேண்டும்.
 மஞ்சள் அல்லது கருப்பு கயிற்றினை விநாயகருக்கு எதிரே உள்ள அரச மரத்தில் கட்டிவிட்டு வணங்கவேண்டும். 9 செவ்வாய் கிழமை தொடர்ந்து இடைவிடாமல் காளியை வணங்கினால் நிச்சயம்
 நினைத்த காரியம் நிறைவேறும். குடும்பத்தில் கணவன் - மனைவிக்குள் பிரச்சினை, பொருளாதாரத் தடை, பில்லி, சூனியம், எல்லாவற்றுக்கும் தடைக்கற்கள், மருத்துவர்களால் கவனிக்க முடியாத
 நோய்கள், மற்றும் படித்து வேலையில்லாமல் அவதிப்படுவோர்க்கும் நல்ல பலன் கிடைக்கும். வெள்ளிக் கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து வழிபாடு செய்ய வேண்டும். யார் எந்த தெய்வத்தை
 வணங்குவது செவ்வாய் தசையில் செவ்வாய் புத்தி நடப்பவர்கள் சூரிய காயத்ரி ஜபித்து வரவும், சூரியனை வழிபட்டு வரவும். செவ்வாய் தசையில் ராகு புத்தி நடப்பவர்கள் ஸ்ரீ சரபேஸ்வரரை வணங்கி
வரவும். செவ்வாய் தசையில் குரு புத்தி நடப்பவர்கள் பிரதோஷ வழிபாடு செய்யவும். செவ்வாய் தசையில் சனி புத்தி நடப்பவர்கள் நீலகண்டர் திரிசதி யை பாராயணம் செய்து வரவும். செவ்வாய்
தசையில் புதன் புத்தி நடப்பவர்கள் சூரிய காயத்ரி ஜபித்து வரவும். செவ்வாய் தசையில் கேது புத்தி நடப்பவர்கள் காலபைரவரை செவ்வாய் தோறும் வணங்கி வரவும். செவ்வாய் தசையில் சுக்கிரன்
 புத்தி நடப்பவர்கள்: வரலட்சுமி பூஜை செய்து வரவும். செவ்வாய் தசையில் சூரியன் புத்தி நடப்பவர்கள் கோ பூஜை வெள்ளி தோறும் செய்து வரவும். செவ்வாய் தசையில் சந்திரன் புத்தி நடப்பவர்கள்
அஷ்டலட்சுமிகளை வணங்கி வரவும். எப்படி பரிகாரம் செய்வது செவ்வாய் இருக்கும் இடத்தின் அதிபதி என்ன கிழமை குறிக்கிறதோ அந்த கிழமையில் பரிகாரம் செய்யலாம். அவரவர் பிறந்த
நட்சத்திரத்தன்றும் பரிகாரம் செய்யலாம். செவ்வாய் கிழமையிலும் பரிகாரம் செய்யலாம். ஜென்ம நட்சத்திரத்துக்கு 4, 8, 12 ஆக வரும் நட்சத்திர நாட்களில் பரிகாரங்கள் செய்யக்கூடாது.
 திருமணத்திற்கு பிறகு பரிகாரம் செய்து கொள்பவரின் மனைவியின் நட்சத்திரத்திலிருந்து 4, 8, 12 ஆக வரும் நாட்களிலும் பரிகாரம் செய்யக் கூடாது. இவர்களின் முதல் குழந்தை ஆணாக
இருந்தால் அந்தக் குழந்தையின் 4, 8, 12 நட்சத்திரங்களில் வரும் நாட்களிலும் பரிகாரங்கள் செய்து கொள்ளக் கூடாது.

Adiyogi Shiva Tamil Song | உடுக்கும் ஊன் அடக்கியான் | Isha Song | MahaSh...

Kudhambai || Siddhar songs || Tamil Poetry || Sounds Of Isha

Monday, 18 May 2020

வண்ணங்கள் சொல்லும் உடல் ஆரோக்கிய கதையை கேக்குறீங்களா

வண்ணங்கள்...பல ஆயிரம் உண்டு. ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான வண்ணங்கள் மீது
 அளவற்ற காதல் இருப்பது இயல்பே. கடைகளுக்கு சென்றாலும் அனைத்துவித பொருட்களையும்
ஒரே கலரில் வாங்கி கொண்டு மேட்ச் மேட்ச்சாக அணிவது பலரின் மனதிற்கு பிடித்தமான ஒன்றாகும்
. உடையில் வண்ணம், ஹேர் டைகளில் வண்ணம், கையில் போடும் டாட்டூக்களில் கூட பலவித வண்ணங்கள்.
இப்படி வானவில் நிறம் போல எல்லாமே கலர்ஃபுல்லாக இருக்க நம் வீட்டுக்கு அடிக்கும் வர்ணம்
 மட்டும் வண்ணமயமாக இல்லை என்றால் நன்றாகவா இருக்கும்.
அதுவும் ஆரோக்கியமான கலர்களை பயன்படுத்தினால் எப்படி இருக்கும்..!? கலரில் ஆரோக்கியமா..? இது என்னடா புதுசா இருக்கேனு யோசிக்கிறீர்களா..?
உண்மைதாங்க ஒவ்வொரு கலருக்குள்ளும் உடல் ஆரோக்கியம் சார்ந்த பல ரகசியங்கள் ஒளிந்து கொண்டிருக்கு. இந்த கலர்கள் சொல்லும் கதை என்னனு தெரிஞ்சிக்கனுமா.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigationJump to search
அகத்தியர்
அகத்தியர்
அகத்தியர் & லோபாமுத்திரை
தகவல்
துணைவர்(கள்)லோபாமுத்திரை
அகத்திய முனிவர்
அகத்தியர் என்பவர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார். சிவபெருமானின் திருமணத்தினை காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், இவர் தென்திசைக்கு பயணப்பட்டு அதை சமன்செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினை தமிழகத்திலிருந்து கண்டவராகவும், தமிழை சிவபெருமானிடமிருந்து கற்றவரும் ஆவார்.[1] இவரே அகத்தியம் எனும் முதல் தமிழிலக்கண நூலை எழுதியவர். இந்நூல் கிடைக்கப்பெறவில்லை. தொல்காப்பியத்தை எழுதிய தொல்காப்பியனார், அகத்தியம் தன் தொல்காப்பியத்திற்கு முன்பே எழுதப்பட்டதாக கூறுகிறார். இவரது மனைவியின் பெயர் லோபாமுத்திரை ஆகும்.

முருகன் குறித்த பழமொழிகள்[தொகு]

  • வேலை வணங்குவதே வேலை.
  • சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை.
  • வயலூர் இருக்க அயலூர் தேவையா?
  • காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி.
  • அப்பனைப் பாடிய வாயால் - ஆண்டிச் சுப்பனைப் பாடுவேனா?
  • முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை;மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை.
  • சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் (சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்)
  • கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை.
  • கந்தன் களவுக்குக் கணபதி சாட்சியாம்
  • பழநி பழநின்னா பஞ்சாமிர்தம் வந்திடுமா?
  • சென்னிமலை சிவன்மலை சேர்ந்ததோர் பழனிமலை.
  • செந்தில் நமக்கிருக்கச் சொந்தம் நமக்கெதற்கு?
  • திருத்தணி முருகன் வழித்துணை வருவான்
  • வேலனுக்கு ஆனை சாட்சி.
  • வேலிருக்க வினையுமில்லை; மயிலிருக்கப் பயமுமில்லை.
  • செட்டிக் கப்பலுக்குச் செந்தூரான் துணை.
  • கந்தன் பாதம் கனவிலும் காக்கும்
  • கந்தசட்டி கவசம் ”விந்து விந்து மயிலோன் விந்து, முந்து முந்து முருகவேள் முந்து”
மழை
மழையின் பெயர்கள் = துளி, திவலை, தூவல், சீகரம், தூறல், மாரி, வருடம், உறை, ஆலி, வானம்.
பெருமழையின் பெயர் = ஆசாரம்.
விடா மழையின் பெயர் = பனித்தல், சோனை.
மழைத் துளியின் பெயர் = திவலை, தூவல், சிதர், சீகரம், ஆலி, தளி, உறை.
ஆலங்கட்டி மழையின் பெயர் = ஆலி, கரகம், கனோபலம்.
இடியின் பெயர் = வெடி, ஒலி, அசனி, செல், விண்ணேறு, மடங்கல், உரும், அனலேறு.
மின்னல் என்னும் மின்னின் பெயர் = வித்துத்து, தடித்து, சம்பை, சபலை, சஞ்சலை, மின்னல், கனருசி.
பனியின் பெயர் = இமம், துகினம்.
வானவில்லின் பெயர் = இந்திரதனு.
மேகத்தின் பெயர் = மங்குல், சீதம், பயோதரம், தாராதரம், குயின், மழை, எழிலி, மஞ்சு, கொண்டல், சீமூதம், கொண்மூ, முகில், விண், விசும்பு, மால், சலதரம், செல், புயல், கனம், கந்தரம், கார், மை, மாரி.

Saturday, 16 May 2020

பல்வேறு அதிசயங்கள் நிறைந்த சிவ ஆலயங்களைப் பார்த்திருப்போம். அப்படிப்பட்ட அதிசயமும்,
சிறப்பம்சமும் வாய்ந்த ஆலயமாக புதுக்கோட்டையில் வேப்பம்பட்டி அமைந்துள்ள நெய் நந்தீஸ்வரர்
ஆலயம் விளங்குகிறது. இந்த நந்தியின் கதை மற்றும் அதன் நெய் அபிஷேக அதிசயம் குறித்து விரிவாக பார்ப்போம்...
பல்வேறு அதிசயங்கள் நிறைந்த சிவ ஆலயங்களைப் பார்த்திருப்போம். அப்படிப்பட்ட அதிசயமும்,
 சிறப்பம்சமும் வாய்ந்த ஆலயமாக புதுக்கோட்டையில் வேப்பம்பட்டி அமைந்துள்ள நெய் நந்தீஸ்வரர் ஆலயம் விளங்குகிறது.
இந்த நந்தியின் கதை மற்றும் அதன் நெய் அபிஷேக அதிசயம் குறித்து விரிவாக பார்ப்போம்...

நெய் நந்தீஸ்வரர் ​கோயில் விபரம்
கோயில் விபரம்

மூலவர்:சொக்கலிங்கேஸ்வரர் சுவாமி

அம்மன் - மீனாட்சி அம்மன்

தல விருட்சமாக வன்னி மரம் உள்ளது.

இந்த கோயில் புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன் பட்டியில் அமைந்துள்ளது.


நெய் நந்தீஸ்வரர்:

தஞ்சாவூரில் மிகப்பெரிதாக நந்தி அமைந்து பக்தர்களை கவர்ந்தது போல, இங்குள்ள நெய் நந்தியும் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

கோயிஒ அமைந்துள்ள வேப்பம்பட்டியில் ஒரு சிவ பக்தர் சிவ லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்தார். ஆனால் நந்தீஸ்வரரை பிரதிஷ்டை செய்யாமல் விட்டுவிட்டார்.

நந்தியின் புனிதம் கருதி அதை தீர்த்த குளத்திற்குள் வைத்து விட்டார். ஒருநாள் அவருக்கு கடுமையான வயிறு வலி ஏற்பட்டது. அப்போது
மானசீகமாக சிவனை வேண்டிக்கொண்டார். தொடர்ந்து அவரின் கனவில் மாடுகள் விரட்டுவது போல காட்சிகள் கண்டு திடுக்கிட்டார்.

உடனே நந்தியை பிரதிஷ்டை செய்வதாகவும், அதற்கு நெய் அபிஷேகம் செய்வதாகவும் வேண்டிக்கொண்டார்.
 இந்த நிகழ்வு நடந்த சில நாட்களிலேயே அந்த பக்தரின் உடல் பிணி தீர்ந்தது. அவர் நெய் அபிஷேகம் செய்து வழிபட்டது போல பலரும்
 நெய் அபிஷேகம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது.

பூலாநந்தீஸ்வரர் ஆலயம்: உயரத்தில் மாறி மாறி காட்சி தரும் அதிசய சிவ லிங்கம்
குழந்தைகள் ஸ்ரீராமஜெயம் எழுதி வணங்கினால், 
கல்வியில் ஞானமும் புத்தியில் தெளிவும் கிடைக்கும் 
என்பது பக்தர்கள் நம்பிக்கை.

ஸ்ரீராமர் அவதரித்த தினமான  ஸ்ரீராமஜெயம் எழுதி பிரார்த்தனை செய்தால், குழப்பங்கள் யாவும் தீரும் என்பது ஐதீகம்.

கோடிக்கணக்கான பக்தர்களின் இதநாயகன் ஸ்ரீராமபிரான் அவதரித்த தினம்  இந்தநாளில் அருகில் உள்ள ராமர் கோயிலுக்குச் சென்று வழிபடுவது பலவித நன்மைகளைத் தந்தருளும் என்பது பக்தர்கள் நம்பிக்கை
மன்னார்குடி அருகில் உள்ள வடுவூர் ராமர் கோயில், தஞ்சாவூர் புன்னைநல்லூர் கோதண்டராமர் கோயில் முதலான பல ஆலயங்களிலும்
 இதையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ராமநவமியையொட்டி வீட்டில் விளக்கேற்றி, ராமருக்கு பால்பாயசம்,
சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து ராம நாமம் சொல்லி வேண்டிக்கொண்டாலும் சுபிட்சம் நிலவும் என பக்தர்கள் நம்புகிறார்கள்.

 ஸ்ரீராமஜெயம் எழுதுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. காலையில் குளித்துவிட்டு, பூஜையறையில் சுவாமி படத்துக்கு எதிரே அமர்ந்துகொண்டு
மனம் ஒருமித்த நிலையில் பக்தர்கள் ஸ்ரீராமஜெயம் எழுதுவார்கள். 108 முறை அல்லது 1008 முறை என இயன்ற அளவு ஸ்ரீராமஜெயம் எழுதுவது வழக்கம்.

ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவதால் மனமும் குணமும் செம்மையாகும். வீட்டில் நிம்மதி பிறக்கும். விலகும். குடும்பத்தில் குழப்பங்கள் விலகும்.
 தம்பதியர் இடையே ஒற்றுமை மேலோங்கும் என்பது ஐதீகம்.
குழந்தைகள் ஸ்ரீராமஜெயம் எழுதி வணங்கினால், கல்வியில் ஞானமும் புத்தியில் தெளிவும் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

Thursday, 14 May 2020

Sivan Song | Pichai Pathiram Full Song Tamil

Kolaru Pathigam with Lyrics - Tamil கோளறு பதிகம் (பாடலுடன்)

Pradosha Padal (Tamil) | பிரதோஷ பாடல்| ப்ரதோஷம் பாடல்

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து.


நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.


நோயாளி, மருத்துவர், மருந்து, அதைத் தயாரிப்பவர் என மருந்து நான்கு வகைப்படும்.


நோயுற்றவர், அதை தீர்ப்பவர், மருந்துகள், பயன்படுத்தும் அளவு சொல்பவர் என்று நான்கு கூறுகளை உடையது மருத்துவம்.

Rudra Namakam Chamakam by Y.N. Sharma

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்
விளக்கம்:
நாள் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறைசெய்யாத அரசன், நாள் தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான்.

Wednesday, 13 May 2020

குறள் 231:
ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல
தூதிய மில்லை உயிர்க்கு
மு.வ உரை:
வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை.

Tuesday, 12 May 2020

THAAYIR CHIRANTHA -Song With Lyrics | Agathiyar | T.K. Kala | Dr.Seerkha...

natharmudi mel irikkum nalla paambe - Thiruvarutchelvar.mp4

திருப்புகழ் 110 அவனிதனிலே (பழநி)

Shanmuga Kavasam with Tamil Lyrics

Lord Muruga teaches Arunagiri the astama siddhi (8 great siddhis)

Muthai Tharu Song | Arunagirinathar Tamil Movie | TM Soundararajan | Man...

Alagendra Sollukku Muruga

Thithikkum Then Paagum - TMS Murugan Devotional Song

Sivapuranam, சிவபுராணம்,Thiruvasagam, திருவாசகம்

இறைவனுக்கும் நமக்கும் இடையே உள்ள தூரத்தை எப்படி குறைக்கலாம்

TMS Murugan Devotional Songs - Mannanalum - Part 02 JUKEBOX

லிங்காஷ்டகம் | lingashtakam | Powerful chants of Lord Shiva By SPB

Muthai Tharu I Sooryagayathri I Thiruppugazh

Kurai Onrum Illai | SRN60 | Uthara Unnikrishnan

Ai Giri Nandini - Durga Strotam | Sadhwi Majumder |

Bho Shambho - S.Aishwarya & S.Saundarya

Bho Shambo Shiva Shambo by Lakshmy Ratheesh & Radhika Venugopal

Nirvana Shatkam (Ameya Records)

Sivayanama Video Song HD | Yazh Movie Song | New Tamil Songs

Om Shivoham Live performance | Ilayaraja 75 | Haricharan Performance | ...

IRUMUDIKETTU SABARIMALAIK | SABARIMALA YATHRA | Ayyappa Devotional Song ...

ஹரிவராசனம் | HARIVARASANAM | SABARIMALA YATHRA | Ayyappa Devotional Son...

பட்டினத்தார் பாடல் HD 1

பெற்ற தாய் தனை

மஹா மிருத்யுஞ்சய மந்திரம் - சாஸ்வதி பிரபு - பிரதோஷம் அன்று கேட்க வேண்டிய...

தினமும் கேட்கவேண்டிய பிரதோஷ சிவன் பாடல்கள் | லிங்காஷ்டகம் சிவ அஷ்டோத்திர...

சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில்.

Siva Om Siva Om || Siva Om Hara Om || Unnikrishnan || Sivan Songs With L...

Om Shivaya . part-2 நமசிவாய நமசிவாய ஓம்நமசிவாய

அருள் வடிவாகிய ஆதி சிவனே - Arul Vadivaagiya Sivane | Sivan Songs Tamil |...

Thenadudaiya Sivane Potri || Thiruvasagam || Thanga Viswanathan || Siva ...

Jenmam Nirainthathu (ஜென்மம் நிறைந்தது) with lyrics in Tamil