தமிழ் மொழி
இன்பத் தமிழை சொல்ல சொல்ல
இனிதே மனம் நெகழ்கிறது மெல்ல மெல்ல
வார்த்தை ஜாலம் பல உண்டு
வாயில் உரைப்போர்க்கு வெகுமதியுண்டு
கவிஞர் படைப்பார் பாமாலை
கற்ப்பனைக் கேட்ட கவிச்சோலை
க்ல்விக்கேது கரை உண்டு
கற்பாய் நீ அதை உணர்ந்து கொண்டு
சொல்ல சொல்ல சுவைத்திடுமே
சுகங்கள் பல கோடி தந்திடுமே
நாடும் வீடும் நலம் பெறவே
நாளும் நற்றமிழை போற்றி காத்திடுவோம் .ஆக்கம் கிருஷ்ணவேணி உதயகுமார்