மழை
வேண்டல்
பார்வையில் ஆயிரம் பரிதவிப்பு
பாரினில் மாந்தர் மனத்துடிப்பு
காரிரல் மேகம் கரைந்திடவே
கழனியில் நெல்மணி விளைந்திடவே
ஆட்டின் ஆசை அறிந்ட்திட்டே
ஆர தழுவி முத்த மிட்டே
கண்களில் நீர் துளி பெருகிடவே
கடவுளின் கருணையை பெற்றிடவே
பொறுமையில் பூமியை மிஞ்சினரே
பொறுத்து பெரு மழை தனை வேண்டினரே
வருணனின் வன்சினம் கலையாதோ
வாழ்வாதாரம் வந்து நிறையாதோ.
வள்ளல் என்று பெயர் எடுக்க
வருணனின் உளமென ஏற்க்கதோ.
ஆக்கம் கிருஷ்ணவேணி உதயகுமார்